விருப்ப ஓய்வு கேட்டு சகாயம் ஐ.ஏ.எஸ் விண்ணப்பம்
தமிழ்நாடு அறிவியல் நகரத் துணைத் தலைவராகக் கடந்த 6 ஆண்டுகளாகப் பதவி வகித்து வருகிறார் சகாயம் ஐ.ஏ.எஸ். ஓய்வுபெற 3 ஆண்டுகள் இருக்கும்போதே, தற்போது விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் சகாயம். இதனால், அடுத்த 2 மாதங்களில் அவர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவார்.
Also Read: “நேர்மையான அதிகாரிகளுக்கு நெருக்கடி!” - ராஜினாமா முடிவில் சகாயம் ஐ.ஏ.எஸ்
இதுகுறித்து ஜூனியர் விகடனுக்குப் பேட்டியளித்த சகாயம் ஐ.ஏ.எஸ், ``ஒரு நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற பெருமிதத்துடன் பணியாற்றிவந்திருக்கிறேன். அளப்பரிய நேர்மையோடுதான் என் நிர்வாகத் தளங்களில் பணியாற்றிவந்திருக்கிறேன். அதற்காக நான் வருந்தவும் இல்லை, வருத்தப்படப் போவதும் இல்லை. இதற்கு மேல் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. விரைவில் என் முடிவை அறிவிப்பேன்” என்று கூறியிருந்தார்.
source https://www.vikatan.com/news/general-news/31-10-2020-just-in-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக