Ad

வெள்ளி, 30 அக்டோபர், 2020

கார்ட்டூன் சர்ச்சை... தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல் - பிரான்ஸில் தொடரும் பதற்றம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே நீஸ் நகரில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பயங்கரவாதி ஒருவர் நடத்திய தாக்குதலில் மூவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரத்தில் துப்பாக்கியுடன் சந்தேகிக்கும் முறையில் நடமாடிய மற்றொரு நபரை போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனால் பாரிஸ் நகரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

என்ன நடந்தது பாரிஸ் நகரில்?

கடந்த 2015-ல் பிரான்ஸின் பிரபல பத்திரிக்கையான சார்லி ஹெப்டோவில் (Charlie Hebdo) வெளிவந்த முகமது நபியின் கார்ட்டூனால் பெரும் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து, 2015-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி சார்லி ஹெப்டோ அலுவலகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

பிரான்ஸ் அதிபர் மோக்ரோன்

கடந்த 16-ஆம் தேதி சாமுவேல் பேட்டி என்னும் வரலாற்று ஆசிரியர் தனது வகுப்பில் முகமது நம்பியின் கேலி சித்திரத்தினை காட்டியதற்காக, 18 வயது இளைஞரால் தலைதுண்டித்துக் கொல்லப்பட்டார். இச்சம்பவமானது பாரிஸ் நகரில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் சர்ச்சை அலைகளை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நிகழ்ந்த பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக் கண்டனம் தெரிவித்தார். அப்போது, அவர் இஸ்லாம் மதம் குறித்து பேசியது சர்ச்சையானது.

பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இஸ்லாம் மத நம்பிக்கைகளைப் புண்படுத்துவதாக பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கருத்து தெரிவித்தார். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அரபு நாடுகளான துருக்கி, கத்தார், ஜோர்டன் உள்ளிட்ட நாடுகள் பிரான்ஸ் தயாரிப்புப் பொருட்களைப் புறக்கணித்தன.

Also Read: பிரான்ஸ்: தலை துண்டித்துக் கொல்லப்பட்ட ஆசிரியர்! - கொடூரத்துக்குக் காரணமான கேலிச் சித்திரம்

இந்நிலையில், பாரிஸிலுள்ள நீஸ் நகரில் அமைந்துள்ள நோட்ரே-டேம் (Notre-Dame) என்னும் கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று காலை 9 மணி அளவில் கையில் கத்தியுடன் சென்ற மர்ம நபர் ஒருவர், அங்கிருந்தவர்களைக் கத்தியால் கொடூரமாகக் குத்தியுள்ளார். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்வபவம் நிகழ்ந்த சில மணி நேரத்தில் அவிங்க்கான் மாகாணத்தில் துப்பாகியுடன் சந்தேக்கிக்கும் முறையில் சுற்றித்திரிந்த நபரை போலீஸார் சுற்றிவளைத்தனர். அப்பொழுது, துப்பாகியைக் கீழே போடும்படி போலீஸார் கட்டளையிட்டுள்ளனர். அதனை ஏற்க மறுத்த அந்த மர்ம நபர் போலீஸாரை நோக்கி நகர்ந்துள்ளார். அப்பொழுது, தற்காப்பு நடவடிக்கைக்காக போலீஸார் அந்த மர்ம நபரை சுட்டு வீழ்த்தீனர்.

தொடர்ந்து நிகழ்ந்து வரும் இதுபோன்ற பயங்கரவாத சம்பவங்களால் பிரான்ஸ் முழுவதும் அதிநவீன ஆயுதங்கள் ஏந்திய பாதுகாப்புப் படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரான்ஸ்

ரோந்துப் பணிக்காக முதலில் 3,000 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது 7,000 வீரர்கள் குவிக்கப்பட்டிருக்கின்றனர். அத்தோடு பயங்கரவாதிகள் தங்கியுள்ள பகுதிகளைத் தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சூழலில் பிரான்ஸுக்கு உரிய உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாக மோடி கூறியிருக்கிறார்.

மலேசிய முன்னாள் பிரதமரின் ட்வீட்டால் சர்ச்சை:

மகாதீர் முகமது

இந்தநிலையில், மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, சாமுவேல் பேட்டியின் கொலையை நியாயப்படுத்தி கருத்துத் தெரிவித்தது சர்ச்சையாகியுள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவர், இஸ்லாமியர்களின் உணர்வுகளைப் புண்படுத்திய பிரான்ஸ் மக்களைக் கொலைசெய்ய இஸ்லாமியர்களுக்கு உரிமையுண்டு என்று கூறியது பெரும் சர்ச்சையானது. தற்போது அந்தப் பதிவை ட்விட்டர் நிர்வாகம் நீக்கியிருக்கிறது.

பிரான்ஸில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/social-affairs/international/knife-attack-in-france-nice-church-3-killed

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக