Ad

சனி, 31 அக்டோபர், 2020

சென்னை: இரண்டாவது மாடி; தவறிவிழுந்த செல்போன்!- பட்டதாரிப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

சென்னை அயனாவரத்தை அடுத்த நம்மாழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் யாமினி (25). இவர் பி.காம் பட்டதாரி. சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கடந்த 25 -ந் தேதி யாமினியின் தாயார் தாட்சாயிணி மற்றும் அவரின் உறவினர்கள் வீட்டின் மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது யாமினி, பால்கனியில் அமர்ந்திருந்தார்.

பட்டதாரிப் பெண் யாமினி

அப்போது யாமினி செல்போனைப் பயன்படுத்திக் கொண்டப்படி பால்கனியில் அமர்ந்திருந்தார். இந்தச் சமயத்தில் அவரின் கையிலிருந்து செல்போன் தவறி கீழே விழுந்தது. அதனால், அதிர்ச்சியடைந்த யாமினி செல்போனைப் பிடிக்க முயற்சி செய்துள்ளார். இதில் கால் தவறி யாமினி மாடியிலிருந்து கீழே விழுந்தார். அதைப்பார்த்து அவரின் தாய் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். கீழே விழுந்த யாமினி, படுகாயமடைந்தார். உடனே அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாமினி உயிரிழந்த தகவல் கிடைத்ததும் அவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து யாமினியின் மரணம் குறித்து அவரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். யாமினியின் குடும்பத்தினர் அளித்த புகாரில் பேரில் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.

Also Read: சென்னை: `காலையில் பெண் பார்க்கும் படலம்; இரவில் தற்கொலை' - பெண் இன்ஜினீயரின் விபரீத முடிவு

திருமணம்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``யாமினியின் தந்தை இறந்துவிட்டார். அவரின் மூத்த சகோதரிக்கு திருமணம் முடிந்து விட்டது. அதனால் யாமினியும் அவரின் அம்மாவும் தனியாக வசித்து வந்தனர். கீழ்தளத்தில் உள்ள வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு 2-வது மாடியில் யாமினியும் அவரின் அம்மாவும் வசித்து வந்தனர். தற்போது யாமினிக்கு அவரின் குடும்பத்தினர் வரன் பார்த்து வருகின்றனர். சம்பவத்தன்றும் யாமினியின் திருமணம் தொடர்பாக அவரின் குடும்பத்தினர் 2-வது மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இந்தச் சமயத்தில்தான் யாமினி மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். அவரின் குடும்பத்தினர் செல்போனைப் பிடிக்க முயன்றபோது யாமினி கீழே விழுந்ததாகக் கூறுகின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-woman-slips-from-second-floor-dies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக