உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மேலும் அவகாசம் கேட்டு மனு!
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மனு அளித்திருக்கிறது. 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த மேல்முறையீடு மனு செய்யப்பட்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மேலும் ஆறு மாத அவகாசம் கோரப்பட்டுள்ளது!
source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-04-09-2021-just-in-live-uipdates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக