Ad

வியாழன், 9 செப்டம்பர், 2021

சிறுமி கொடுத்த புகார்; லிஃப்ட் கொடுப்பதுபோல் பாலியல் அத்துமீறல்! - உறவுக்கார நபர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்துள்ள பனப்பாக்கம் கல்பலாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயகுமார். வயது 43. இவருக்குத் திருமணமாகி மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகள் கல்லூரியிலும், இன்னொரு மகள் பிளஸ் டு வகுப்பும் படிக்கின்றனர். இந்தநிலையில், கடந்த 4-ம் தேதியன்று ஜெயகுமார் பைக்கில் பனப்பாக்கம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் சத்துணவு முட்டை வாங்குவதற்காக நடந்துச் சென்றுகொண்டிருந்தார்.

Representational Image

சிறுமியின் அருகில் பைக்கை நிறுத்திய ஜெயகுமார், ‘‘பள்ளி வழியாகத்தான் செல்கிறேன். போகும் வழியில் விட்டுவிடுகிறேன். பைக்கில் ஏறு’’ என கூறியுள்ளார். ஜெயகுமார் ‘பெரியப்பா’ முறை உறவினர் என்பதால் அவரின் பைக்கில் ஏறி உட்கார்ந்தார் சிறுமி. பள்ளிக்குப் போகும் வழியில் செல்லாமல், பொய்கைநல்லூர் என்ற பகுதிக்கு சிறுமியை அழைத்துச்சென்ற ஜெயகுமார், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பைக்கை நிறுத்தியுள்ளார். பின்னர், சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுபற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி அங்கேயே சிறுமியை விட்டுவிட்டு பைக்கில் தப்பிச்சென்றிருக்கிறார் ஜெயகுமார். பயத்தில் நடுங்கிய சிறுமிக்கு வீடு திரும்பிய நிலையில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதில், கொடுமை என்னவெனில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை தட்டிக்கேட்க தந்தை இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் தந்தை இறந்துவிட்டாராம். தாய்க்கும் மனநல பாதிப்பு இருப்பதாக சொல்கிறார்கள். இந்த துணிச்சலில்தான் சிறுமியிடம் அத்துமீறியிருக்கிறார் ஜெயகுமார்.

ஜெயகுமார்

திடீர் காய்ச்சல் காரணமாக, அக்கம், பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து சிறுமியை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் விபரீதம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தனர். மருத்துவர்கள் கேட்டப் பின்னரே தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியிருக்கிறார் சிறுமி. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்துவந்து சிறுமியிடம் விசாரித்தனர். தந்தை இல்லை; தாய் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதால் சிறுமியிடமே புகார் மனுவைப் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து, ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் வீட்டில் பதுங்கியிருந்த ஜெயகுமாரை கைதுசெய்து சிறையிலடைத்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/crime/14-year-old-girl-sexually-harassed-relative-arrested-in-arakkonam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக