Ad

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

Tamil News Today: `மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும்!’ - ஸ்டாலின் அறிவிப்பு.. ஓ.பி.எஸ் வரவேற்பு

`மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும்..’ - ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து பேசுகையில், ``மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ், நுழைவுத்தேர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறார். நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் கருணாநிதி” என தந்தைக்கு புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், ``அரைநூற்றாண்டு நிரந்தர தலைப்பு செய்தியாக இருந்தவர் கருணாநிதி” எனவும் தெரிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

முதல்வரின் அறிவிப்பு குறித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், ``மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படுவதை முழுமனதுடன் அதிமுக வரவேற்கிறது. 50 ஆண்டுகாலம் எம்.எல்.ஏ-வாக இருந்த கருணாநிதி பல சிறப்பு சட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர். சினிமாவில் கலைஞரின் வசனம் அனல் பறக்கும். அது சமூகத்தை முன்னேற்ற துணை நின்றுள்ளது வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருக்கிறார். வரலாற்றில் கலைஞரின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும்” என்றார்.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-24-08-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக