Ad

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

`₹500 வேண்டாம், ₹100 நோட்டா கொடுங்க!' - சில்லறை கேட்பது போல் நூதன மோசடி செய்த கும்பல்; என்ன நடந்தது?

சில்லறை கேட்பது போல் ஏமாற்றி, 500 ரூபாய் நோட்டுகளை, கரூர் வியாபாரிகளிடம் இளைஞர்கள் 10 பேர் நூதனமாகத் திருடிச் சென்ற சம்பவம், கரூர் நகர வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து, கரூர் நகரத்தைச் சேர்ந்த வணிகர்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

கரூர் மாவட்டம், சின்னாண்டான்கோவில் சாலையில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் நிறைய உள்ளன. இந்தப் பகுதியில் தினமும் வியாபாரம் பிஸியாக நடைபெறும். இதனால், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள வந்தனா மார்பிள்ஸ் என்ற கடைக்கு இளைஞர்கள் சிலர் வந்துள்ளனர்.

கரூர்

Also Read: கரூர்:முதல் இறுதிப் பயணம்; மயானப் பாதைக்கான போராட்டத்தில் உயிரிழந்த பட்டியலினத்தவர்!-நடந்தது என்ன?

கடை முதலாளியிடம், ``நாங்க தொழிலாளிகள். எங்களுக்கு சம்பளம் தந்தாங்க. 2,000 ரூபாய் நோட்டுகளாக 5 நோட்டுகள் இருக்கு. அதை நாங்க பிரித்துக்கொள்வதற்கு ஏதுவாக ரூ. 500 ரூபாயாக சில்லறை வேண்டும்'' என்று கூறி, சில்லறை கேட்டுள்ளனர்.

அவர்கள் கூறியதை நம்பிய கடை உரிமையாளர், அவர்களிடமிருந்து 2000 ரூபாய் ஐந்து நோட்டுகளை பெற்றுக்கொண்டு, அதற்கான சில்லறையாக, 500 ரூபாய் நோட்டுகள் 20-யை தந்துள்ளனர். அதைப் பெற்றுக்கொண்ட இளைஞர்கள், அதை எண்ணி பார்ப்பது போல் பார்த்துவிட்டு, 500 ரூபாய் நோட்டுகள் 10 நோட்டுகளை பின்புறம் மறைத்துவிட்டு, மீதமுள்ள பத்து 500 ரூபாய் நோட்டுகளை திருப்பி கொடுத்துள்ளனர். அதோடு, அந்தக் கடை முதலாளியின் கவனத்தை திசைத் திருப்பும்பொருட்டு, `100 ரூபாய் நோட்டுகளாகக் கொடுங்கள்' என வாக்குவாதத்தில் செய்துள்ளனர்.

அதனால், அவர்கள் கொடுத்த பணத்தை வாங்கியதும் அதை எண்ணி பார்க்காமல் கல்லாவில் போட்ட கடை உரிமையாளர், ``100 ரூபாய் நோட்டுகள் இல்லை'' என்று கூறியுள்ளார். அதற்கு அந்த இளைஞர்கள், ``அப்படின்னா, 500 ரூபாய் நோட்டுகளையே கொடுங்கள்'' எனக் கூறியதோடு, கடை முதலாளி கொடுத்த 500 ரூபாய் நோட்டுகள் 20-ஐ வாங்கிச் சென்றுள்ளனர்.

இதேபோன்று, இன்னொரு முறையும் ஏமாற்றியுள்ளனர். இந்த நிலையில், இரவில் கல்லாவில் இருந்த பணத்தைக் கணக்கு பார்க்கும்போது, 10,000 ரூபாயை ஏமாந்தது கடை உரிமையாளருக்குத் தெரிய வந்துள்ளது. பின்பு, தனது கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது, பணத்தை எடுத்து வைத்துக்கொண்டு அந்த இளைஞர்கள் சில்லறை கேட்பதுபோல், ஏமாற்றி பணத்தைத் திருடிச் சென்றது தெரிந்தது. இந்த விஷயத்தை அவர், அக்கம்பக்கத்தில் உள்ள கடை உரிமையாளர்களிடம் சொல்லியுள்ளார்.

கரூர்

Also Read: ₹100-க்கே ₹2 லட்சம் இன்ஷூரன்ஸ் கவரேஜ்; வங்கிகளில் கிடைக்கும் இந்த சேவைகள் பற்றி தெரியுமா? - 9

அப்போது, அப்படி அங்குள்ள சில கடை உரிமையாளர்களும் ஏமாற்றப்பட்டது தெரிய வந்ததை அடுத்து. அந்தந்தக் கடைகளில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை, கடை உரிமையாளர்கள் சோதனை செய்துள்ளனர். அதில், 3 இரு சக்கர வாகனங்களில் ஆண்கள், பெண்கள் என 10 பேர் வந்திருப்பதும், அவர்கள் அப்பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளுக்குச் சென்று, இதேபோன்று நூதன முறையில் செயல்பட்டு, பணத்தை ஏமாற்றியுள்ளது தெரிய வந்தது.

இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட கடைக்காரர்கள் கரூர் நகர காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். மேலும், தாங்கள் பாதிக்கப்பட்டது எப்படி என்பது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வாட்ஸ் அப்பில் மற்ற வணிகர்களிடம் பகிர்ந்து, ``நாங்கள் இப்படி ஏமாந்துவிட்டோம். மற்றவர்கள் யாரும் இதுபோல் ஏமாற வேண்டாம். எச்சரிக்கையாக இருங்க'' என்று பதிவிட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். நூதன முறை கரூர் வணிகர்களிடம் இளைஞர்கள் சிலர் ஏமாற்றியிருப்பது, கரூர் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo



source https://www.vikatan.com/news/crime/karur-youth-group-cheat-business-people-in-the-market-others-alerted

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக