சுமார் 800 வருடங்களுக்கு முன் இங்கிலாந்தில் முதன்முறையாக ஹால்மார்க் அறிமுகம் செய்யப்பட்டது. தங்கத்துடன் கலப்படம் செய்து விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக இதை நடைமுறைப் படுத்தினர்.
சர்வதேச வர்த்தக அமைப்பான டபிள்யூடிஓ என்ற தங்க நகை ஏற்றுமதி செய்யும் 164 உறுப்பு நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவும் ஒன்று என்பதால் இந்திய அரசு BIS தரச்சான்றைக் கட்டாயமாக்கியுள்ளது.
எனவேதான் BIS ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் தங்கத்துக்கு 2000-ம் ஆண்டிலும், வெள்ளிக்கு 2005-ம் ஆண்டிலும் ஹால்மார்க் முத்திரை அறிமுகப்படுத்தப்பட்டது. நம் நாட்டில் ஹால்மார்க் என்ற பொறுப்பை, `இந்திய தர நிர்ணய கழகம்' மத்திய அரசின் சார்பாக கவனித்து சோதனையை செய்கிறது.
இன்று முதல் ( ஏப்ரல் 1) ஹால்மார்க் தனித்துவ குறியீடு எண் (HUID - Hallmark Unique Identification number) பெற்ற நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என நகைக் கடைகளுக்கு இந்திய தர நிர்ணய ஆணையமான BIS வலியுறுத்தியுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு நகைக்கும் நகைக் கடை உரிமையாளர்கள் ஹால்மார்க் முத்திரையைப் பதிக்க வேண்டும். இந்தியாவில் 288 மாவட்டங்களிலும் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் 26 மாவட்டங்களில் உள்ள 13,341 கடைகளில் ஹால்மார்க் நடைமுறைக்கு வந்துவிட்டது.
இதில் 2 கிராமுக்கு குறைவான எடை கொண்ட நகைகளுக்கு, இந்த நடைமுறை கட்டாயமில்லை. மேலும், ஆண்டுக்கு ரூ.40 லட்சத்துக்கும் குறைவாக விற்பனை செய்யும் கடைகளுக்கும் இது கட்டாயம் இல்லை என இந்திய தர நிர்ணய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
பி.ஐ.எஸ், பதிவு பெற்ற நகை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் இந்தத் தனித்துவ அடையாள எண் இன்றி விற்பனை செய்தால், அவர்களின் பதிவு ரத்து செய்யப்படும். பி.ஐ.எஸ், பதிவு பெறாத நகை விற்பனையாளர்கள் ஹெச்.யூ.ஐ.டி எண்ணுடன் ஹால்மார்க் செய்த நகைகளையோ, ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளையோ விற்பனை செய்ய அனுமதி இல்லை. மீறினால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதை நடைமுறைகளை கடைப்பிடிக்காமல் விதிகளை மீறும் நகைக் கடைகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் அல்லது நகையின் விலையில் 5 மடங்கு அபராதம் அல்லது கடையின் உரிமை யாளருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
ஹால்மார்க் முத்திரையில் உள்ள ஐந்து பிரிவுகள்:
-
BIS தர நிர்ணய கழகத்தின் சின்னம்.
-
தங்கத்தின் தன்மை... 22 காரட் தங்கத்தில் 916 முத்திரையும், 21 தங்கத்தில் 875 என்ற முத்திரையும் இடப்பட்டிருக்கும்.
-
ஹால்மார்க் செய்யப்படும் மையத்தின் சின்னம்.
-
நகைகள் செய்யப்பட்ட வருடம் ரகசியமாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
-
BIS அங்கீகாரம் வணிகரின் சின்னம்.
இந்த ஐந்து முத்திரைகளும் ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளில் இருக்கும்.
ஹால்மார்க் தனித்துவ குறியீடு எண் பெறும் நடைமுறையின் மூலம் நகையின் தரம், விற்பனை தொடர்பான விவரங்களை நுகர்வோர் தெரிந்துகொள்ள முடியும். இதற்காக ஒவ்வொரு நகைக் கடைக்கும் ஓர் எண் வழங்கப்பட்டுள்ளது. மேலும், BISCARE APP-ல் 6 இலக்க எண்ணைப் பதிவிட்டு நகையின் தரத்தையும் அறிந்துகொள்ள முடியும்.
source https://www.vikatan.com/personal-finance/gold/hallmark-mandatory-what-should-be-considered-while-buying-gold-jewellery
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக