Ad

வியாழன், 9 செப்டம்பர், 2021

Covid Questions: கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் வாசனையிழப்பு ஏற்படுகிறது?

கோவிட் தொற்றுக்கும் வாசனையிழப்புக்கும் என்ன தொடர்பு? கொரோனா பாதித்த எல்லோருக்கும் இந்தப் பிரச்னை வருமா?

- ஶ்ரீராம் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் ராமகிருஷ்ணன்.

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை நோய் சிகிச்சைகளுக்கான மருத்துவர் ராமகிருஷ்ணன்.

``கோவிட் வைரஸானது ரத்த நாளங்களிலும் நுரையீரலிலும் உள்ள ஏசிஇ இன்ஹிபிட்டார்ஸ் (Angiotensin-converting enzyme (ACE) inhibitors) எனும் பகுதியைத் தாக்கக்கூடியது. இந்த ஏசிஇ இன்ஹிபிட்டார்ஸ் மூக்கிலும் இருக்கும். அதன் வழியாகத்தான் நாம் வாசனையை உணர்கிறோம். இந்தப் பகுதியில் சப்போர்ட்டிங் செல்கள் உள்பட நிறைய செல்கள் இருக்கும். இந்த சப்போர்ட்டிங் செல்களின் உதவியின்றி நம்மால் வாசனையை உணர முடியாது.

Also Read: Covid Questions: கொரோனாவிலிருந்து மீண்டுள்ளேன்; என் ஆரோக்கியத்தை மீட்க என்ன டயட் பின்பற்றலாம்?

கோவிட் 19 வைரஸானது இந்த செல்களைத் தாக்குவதால் வாசனையை உணரச் சொல்லும் சிக்னல் மூளைக்கு கிடைப்பது தடைப்படுகிறது. அதனால்தான் கோவிட் தொற்று பாதித்தவர்களுக்கு வாசனையை உணரும் தன்மை போகிறது.

சாதாரண ஜலதோஷத்திலும் சில நேரம் இப்படி வாசனையை உணர முடியாமல் போவதுண்டு. அதற்கு காரணம் மூக்குப் பகுதியில் ஏற்படும் இடிமா (Edema) எனப்படும் வீக்கம். மூக்குக்கான டிராப்ஸ் உபயோகித்தாலோ, மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலோ அந்த வீக்கம் குறைந்து, மீண்டும் வாசனையை உணரத் தொடங்குவோம். சாதாரண ஜலதோஷத்துக்கு காரணமான அடினோ வைரஸ், ரைனோ வைரஸ் போன்றவை நரம்புகளை பாதிப்பதில்லை.

Corona Virus (Representational Image)

Also Read: Covid Questions: கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு நினைவிழப்பு ஏற்படுமா?

ஆனால் கோவிட் வைரஸ் நரம்புகளை பாதிக்கிறது. அதனால்தான் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு `அனாஸ்மியா' (Anosmia) எனப்படும் வாசனையிழப்பு பிரச்னை வருகிறது. இந்தப் பிரச்னை கொரோனா பாதித்த எல்லோருக்கும் வருவதில்லை. மிதமான பாதிப்புள்ளவர்களில் 30 சதவிகிதம் பேருக்கு மட்டுமே வருகிறது. அனாஸ்மியா பாதிப்பு வந்தாலே, சம்பந்தப்பட்ட தொற்றாளருக்கு கொரோனா தொற்று தீவிரமாகவில்லை என உணர்ந்துகொள்ளலாம். தொற்று குணமானதும் இந்தப் பிரச்னையும் தானாகச் சரியாகிவிடும்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/why-covid-positive-people-tend-to-lose-the-sense-of-smell

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக