Ad

புதன், 1 செப்டம்பர், 2021

கொடநாடு: எஃப்.ஐ.ஆர்-ல் வெட்டுக்காயம்; உடற்கூறாய்வில் மூச்சுத் திணறல்! -காவலாளி கொலையில் சர்ச்சை?

விலகாத மர்மங்களோடு அடுத்தடுத்த தொடர் பரபரப்பு திருப்பங்களைக் கண்டுவரும் கொடநாடு கொலை - கொள்ளை வழக்கில், தற்போது கூடுதல் புலன்விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையிலேயே கடந்த 17-ம் தேதி காவல்துறை தரப்பில் முதன்மை குற்றவாளியாக கருதப்படும் சயானிடம் 3 மணி நேர ரகசிய வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலாதாவின் கார் ஓட்டுநரும், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக காவல்துறையால் கருதப்பட்டு, வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடமும் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவத்தன்று இரவு நேர காவல் பணியில் ஈடுபட்ட காவலர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையின் மூலம் பல மர்மங்களுக்குக்கு காவல்துறையினர் விடைத்தேடி வருகின்றனர்.

கொடநாடு வழக்கு விசாரணை

இந்த நிலையில், கொடநாடு பங்களா காவலாளி ஓம் பகதூர் கொலை தொடர்பாக காவல்துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைக்கும், மருத்துவர்கள் அளித்துள்ள கூறாய்வு முடிவுகளுக்கும் பெரிய முரண் இருப்பதாக எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டு வருகின்றனர்.

Also Read: மீட்டிங்; ரகசிய பேரம்; எடப்பாடி பழனிசாமிக்கு திகில் கிளப்பும் கொடநாடு!| Elangovan Explains

இந்த சர்ச்சை குறித்து நம்மிடம் பகிர்ந்த எதிர்தரப்பு வழக்கறிஞர் ஒருவர், ``2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கும்பல் எஸ்டேட்டிற்குள் நுழைந்தது. அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர், இவர்களை தடுத்துள்ளார். அந்த கும்பல் ஓம்பகதூரை கொலை செய்தது. ஓம்பகதூர் கொலை செய்யப்பட்ட விதம் குறித்து போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையின்படி, ஓம்பகதூர் உடலில் ஏழு இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

கொடநாடு எஸ்டேட்

ஆனால், மருத்துவ குழுவினர் அளித்த பிரேத பரிசோதனை முடிவில் ஓம்பகதூர் உடலில் ரத்தக் காயங்கள் ஏதும் இல்லை. மூச்சுத் திணறியே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முரண்பட்ட தகவல்கள் பல சந்தேகங்களை எழுப்பிகின்றன. இது குறித்த வாதத்தின்போது நீதிமன்றத்தில் எதிர்தரப்பிடம் கேள்வியெழுப்புவோம்" என்றார்.

Also Read: கொடநாடு வழக்கு: கொள்ளையர்களிடம் வாகன சோதனை; நைட் டூட்டி பார்த்த போலீஸாரிடம் ரகசிய விசாரணை!



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/two-different-statements-in-fir-and-post-mortem-in-kodanadu-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக