Ad

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

Covid Questions: இரண்டு டோஸ் தடுப்பூசிக்குப் பிறகும் தொற்று பாதித்தது; பிறகு எதற்கு தடுப்பூசி?

இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டேன். அதன் பிறகும் எனக்கு கோவிட் தொற்று பாதித்தது. பிறகு ஏன் தடுப்பூசி போடச் சொல்லி வலியுறுத்துகிறீர்கள்?

- பரந்தாமன் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் விஜயலட்சுமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி.

``தடுப்பூசி போட்டுக்கொள்வதால் தொற்றே வராது என்று சொல்ல முடியாது. தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு உடலில் ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு செல்கள் உருவாக்கப்படுகின்றன. அதன் மூலம் உங்களுக்குத் தொற்று ஏற்பட்டாலும் அது தீவிர நிமோனியாவாக மாறாது, ஐசியூவில் அனுமதிக்க வேண்டிய அளவுக்குத் தீவிர நிலைக்கு கொண்டுபோகாது.

Also Read: Covid Questions: தொட்டாலே நமக்கு தொற்றுமா கோவிட்?

கோவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் அது சாதாரண சளி, காய்ச்சல் போல உங்களுக்கு வந்துபோய்விடும். தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் பெருமளவில் குறையும்.

மக்கள்தொகையில் பெரும்பான்மை, அதாவது 70-80 சதவிகிதத்தினர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்போது அதனால் `ஹெர்டு இம்யூனிட்டி' எனப்படும் மந்தை எதிர்ப்பு சக்தி உருவாகும். அந்த நிலை வந்துவிட்டால் கோவிட் தொற்று எண்ணிக்கை வெகுவாகக் குறையும்.

A health worker prepares to administer a COVID-19 vaccine

Also Read: Covid Questions: கொரோனா தொற்று குறைகிறது; இன்னும் நான் மாஸ்க் அணியத்தான் வேண்டுமா?

எனவே தடுப்பூசி போட்டாலும் தொற்று வருகிறதே.... பிறகு எதற்கு அது என்று அலட்சியமாக நினைக்காமல், தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் நீங்கள் தீவிர பாதிப்புகளிலிருந்து தப்பித்தீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo



source https://www.vikatan.com/health/healthy/why-should-people-turn-positive-even-after-two-dose-vaccination

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக