தியேட்டர்கள் இன்று முதல் தமிழகத்தில் திறந்தாலும் நேரடி ஓடிடி ரிலீஸ் படங்களில் எந்த மாற்றமும் இல்லை. விஜய் சேதுபதி நடித்த 'துக்ளர் தர்பார்', 'கடைசி விவசாயி' சந்தானம் நடித்த 'டிக்கிலோனா' படங்கள் ஒடிடி-யில் விரைவில் வெளியாகின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் 'கர்ணன்' பட ரிலீஸான ஒரு வாரத்தில் கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டன. இரண்டாம் அலை அதிகபட்ச பாதிப்புகளை ஏற்படுத்தியதால் தியேட்டர்கள் திறப்பு என்பது எப்போது என்றே தெரியாமல் போனது. இந்நிலையில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப்பிறகு இன்று முதல் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 50 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், முன்பே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி 'துக்ளக் தர்பார்', 'டிக்கிலோனா', 'கடைசி விவசாயி' ஆகிய படங்கள் ஒடிடி-யில்தான் வெளியாகின்றன.
விஜய் சேதுபதி, ராஷிகண்ணா, பார்த்திபன், மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் 'துக்ளக் தர்பார்' படம் செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக சன் டிவி-யில் வெளியாகிறது. இதன் ஒடிடி உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. டிவியில் படம் ஒளிபரப்பானதும் படம் ஓடிடிக்கு வரும்.
Also Read: ஐஸ்வர்யா ராஜேஷின் `பூமிகா'... பேய் சொல்லும் மெசேஜ் என்னன்னா?! ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!
அதேபோல 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் 'கடைசி விவசாயி' படம் 'சோனி லிவ்' தளத்தில் இம்மாதம் வெளியாக உள்ளது. 'டிக்கிலோனா' ஜீ ஒரிஜினல் வாங்கியிருப்பதால் ஜீ டிவி மற்றும் ஜீ5-ல் வெளியாகிறது.
இதேபோல சிவகார்த்திகேயன் நடிப்பில் 'பீஸ்ட்' நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் 'டாக்டர்' படம் சன் டிவி-க்கு சேட்டிலைட் ரைட்ஸும், ஹாட்ஸ்டாருக்கு ஒடிடி ரைட்ஸும் கொடுத்திருப்பதாக வெளிவரும் தகவல்களை மறுக்கிறார் 'டாக்டர்' பட தயாரிப்பாளரான ஜே.ராஜேஷ்.
" 'டாக்டர்' படம் ஒடிடி-க்கு கொடுக்கப்பட்டதாக வெளிவரும் தகவல்களில் உண்மையில்லை. அதேபோல தியேட்டர் ரிலீஸ் குறித்தும் நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை" என்றார்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/vijay-sethupathi-santhanam-movies-to-release-in-ott-as-planned
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக