Ad

வெள்ளி, 28 ஜனவரி, 2022

மகத்தான குடியரசு தினத்தில் விகடனின் மகத்தான ஆஃபர்!

நாடு முழுவதும் பல புரட்சிகளையும், அகிம்சை வழிப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுயிர் நீத்து தேசத்தலைவர்கள் சுதந்திரம் வாங்கித் தந்தபோது நாம் சுதந்திர நாடாய் சுயமாய் எழுந்து நின்றோம். குடியரசு நாடானபோது, உலக அரங்கில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக தலைநிமிர்ந்து நின்றோம்.

சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமை கொள்ளும் ஒரு நாளாக அமைந்தது தான் நமது குடியரசு தினம்! இந்த நன்நாளில் தமது தாய்நாட்டிற்காக உயிரையும், வாழ்வையும் அர்ப்பணித்த தேசத் தலைவர்களையும், சுதந்திரப் போராட்ட வீரர்களையும் நினைவுகூர்வோம்.

இத்தகைய மகத்தான நாளில், சுதந்திரப்போர் தொடங்கி தற்போது கொரோனாவுக்கு எதிரான போர் வரை... 96 ஆண்டுகளாய் விகடன் அறத்தின் மீது தன்னிகரற்ற நம்பிக்கை வைத்துள்ள தமிழ்க் குடும்பங்களோடு நீங்களும் இணைந்திடுங்கள். நூற்றாண்டைத் தொடும் இந்த நெடிய பாரம்பரியத்தில் நீங்கள் இணைய, ஓர் அரிய வாய்ப்பாக REPUBLIC DAY OFFER அறிமுகப்படுத்துகிறோம்.

இச்சலுகையைப் பயன்படுத்தி நீங்களும், உங்கள் குடும்பத்தாரும் ஓர் சிறப்பான வாசிப்பனுபவத்தைப் பெற வேண்டும் என்பதே விகடனின் விருப்பம். விகடனுக்கு நீங்கள் செலுத்தும் சந்தாத் தொகை என்பது, விகடன் டிஜிட்டல் இதழ்களின் விலை மட்டுமல்ல; விகடனின் இதழியலோடும், அறத்தோடும் நீங்கள் என்றென்றும் இணைந்திருப்பீர்கள் என்பதற்கான அடையாளம்!

இது மட்டுமில்லாமல், தினம்தோறும் சந்தா செலுத்தும் வாசகர்களில் இருந்து, 10 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ.100 மதிப்பிலான அமேசான் கிப்ட் கார்ட் பரிசாக வழங்கவிருக்கிறோம்.

இதோ உங்களுக்காக மூன்று சிறப்புச் சலுகைகள்:

* Save ரூ.850 > ரூ.1749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.899 ரூபாய் மட்டுமே! மேலும் இதனுடன் அமேசான் பரிசு கூப்பன் + 1 மாத சந்தா இலவசமாக பெறுங்கள்!

* Save ரூ.1,199 > ரூ.2998 மதிப்புள்ள 2 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.1799 மட்டுமே! மேலும் இதனுடன் அமேசான் பரிசு கூப்பன் + ரூ.100 மதிப்புள்ள E-Books + 2 மாத சந்தா இலவசமாக பெறுங்கள்!

* Save ரூ.11,000 > ரூபாய் ₹19,999 மதிப்பிலான டிஜிட்டல் ஆயுள் சந்தா வெறும் ரூ.8999 மட்டுமே! மேலும் இதனுடன் அமேசான் பரிசு கூப்பன் + ரூ.500 மதிப்புள்ள E-Books இலவசமாக பெறுங்கள்!

விகடன் டிஜிட்டல் சந்தா பலன்கள்: வெப், மொபைல் ப்ரவுசர், டேப்லட், மொபைல் ஆப் என எதிலும் லாகின் செய்யலாம் | ஒரேநேரத்தில் ஐந்து டிவைஸ் வரை லாகின் செய்யும் வாய்ப்பு | விகடன் App-ல் இதழ்களை Flip Book ஆக வாசிக்கும் கூடுதல் வசதி | விளம்பரக் குவியல் இல்லாத நேர்த்தியான வாசிப்பு அனுபவம் | விகடன் சிறப்புத் திட்டங்களில் சந்தா உறுப்பினர்களுக்கே முன்னுரிமை!



source https://www.vikatan.com/news/announcements/republic-day-special-vikatan-digital-subscription-offers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக