Ad

சனி, 15 ஜனவரி, 2022

Tamil News Today: தமிழகத்தில் அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு... என்னென்ன கட்டுப்பாடுகள், எதற்கெல்லாம் அனுமதி?

தமிழகத்தில் அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு... என்னென்ன கட்டுப்பாடுகள், யாருக்கெல்லாம் அனுமதி?

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியிருக்கிறது. அந்த வகையில், வாரத்தின் இறுதி நாளான இன்று மக்கள் நடமாட்டத்தை முடக்க அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியிருக்கிறது. அதன் காரணமாக தமிழகம் முழுவதும் பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

முழு ஊரடங்கு

முழு ஊரடங்கு காரணமாக இன்று காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்படவில்லை. அதேபோல, இன்று பொதுப்போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரெயில் சேவை இயங்காது. மின்சார ரெயில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முழு ஊரடங்கு -சென்னை

உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும்அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இன்று முழு ஊரடங்கையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலீஸார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாநகரில் மொத்தம் 312 இடங்களில் போலீஸார் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர். தேவையின்றி வாகனங்களில் வெளியில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரித்துள்ளனர். அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளை போலீஸாரிடம் காண்பித்துவிட்டு செல்லலாம்.



source https://www.vikatan.com/news/general-news/16-01-2022-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக