குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத் தொடர்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட கூட்டத்தொடர் இன்று தொடங்கி பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அடுத்தகட்ட கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தின் முதல் நாளான இன்று நாடாளுமன்ற இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அப்போது அவர் கடந்த ஆண்டு மத்திய அரசு அமல்படுத்திய நலத் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள், எதிர்கால திட்டங்கள் பற்றிய விவரங்களை அறிவிப்பார். காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் உரை இடம்பெற உள்ளது. அதன் பிறகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/news/parliament-budget-session-will-start-with-president-speech
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக