தமிழகத்தில் அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு! - என்னென்ன கட்டுப்பாடுகள், எதற்கெல்லாம் அனுமதி?
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில், இன்றைய தினமும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த முழு ஊரடங்கு தினத்தில், பால், பத்திரிகை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அதேபோல, உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், வணிக நிறுவனங்கள், உள்ளிட்டவை இயங்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பேருந்து, மெட்ரோ ரெயில் இயங்காது. அதற்கு பதிலாக மக்களின் அவசர பயன்பாட்டுக்காக குறைந்த எண்ணிக்கையில் மின்சார ரயில்கள் மட்டும் இயங்கும்.
வெளியூரிலிருந்து பேருந்துகள் மற்றும் ரயில்களில் வரும் பயணிகளுக்காக ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் ஆட்டோ, வாடகைகார்கள் நிபந்தனைகளுடன் இயங்க காவல்துறையினர் அனுமதி வழங்கியிருக்கின்றனர்.
திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள் அதற்கான அழைப்பிதழை கையில் வைத்திருக்க வேண்டும். வாகன சோதனையின்போது காண்பித்துவிட்டு செல்லலாம்.
source https://www.vikatan.com/news/general-news/23-01-2022-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக