Ad

புதன், 19 ஜனவரி, 2022

1 செல்ஃபி ரூ.2.22 லட்சம் என ஒரு மில்லியன் டாலர் சம்பாதித்த 22 வயது இந்தோனேசிய மாணவரின் கதை!

உங்கள் செல்ஃபிக்கு என்ன மதிப்பிருக்க போகிறது. சமூக ஊடகத்தில் பகிர்வதன் மூலம் கிடைக்கும் லைக், க்ஷேர், கமெண்டுகளைத் தாண்டி எனப் பலரும் கூறியிருப்பர். ஆனால் ஒருவரின் செல்ஃபி 2.22 இலட்சத்திற்கு விலை போகும் என்றால் நம்புவீர்களா? அதுவும் ஒரு சாதாரண கல்லூரி மாணவரின் செல்ஃபி.எங்கே அவசரமாக ஓடுறீங்க, செல்ஃபி எடுக்கவா. இருங்க பாஸ், முழுசா படிச்சுட்டு போலாம்.

சுல்தான் கஷ்தப் அல் கஷாலி

சுல்தான் கஷ்தப் அல் கஷாலிக்கு 2017 இல் ஒரு ஆசை வந்தது. தன்னுடைய கல்லூரி பருவத்தின்போது தன் முகம் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை தினமும் ஒரு செல்ஃபியாக எடுத்து ஹைபர்லேப்ஸ் எனப்படும் விரைவான வீடியோவாக மாற்ற வேண்டும் என்பதே அந்த ஆசை. அதற்காக தினமும் செல்ஃபி ஒன்றை தன் கணினிக்கு முன்பு நின்றவாரோ அமர்ந்தோ எடுத்தது வந்திருக்கிறார். டிசம்பர் 2021 அந்த செல்ஃபிகளை எல்லாம் NFT எனப்படும் மாற்ற இயலாத டிஜிட்டல் டோக்கன்களாக மாற்றி ஒபன்சீ எனப்படும் தளத்தில் விற்பனைக்கு வைத்திருக்கிறார். தன்னுடைய ஒரு படத்திற்கு மூன்று அமெரிக்க டாலர் என விலையும் நிர்ணயித்து இருந்தார்.

மீதி கதையைக் கேட்பதற்கு முன்னால் NFT என்றால் என்னவென பார்த்துட்டு வந்துருவோம். NFT எனப்படுவது Non Fungible Token. பரிமாற்றம் செய்ய முடியாத டோக்கன். இவை டிஜிட்டல் வடிவிலானது. பிளாக்செயின் எனப்படும் தொழில்நுட்பத்தில் பதியப்பட்டது. NFT இசை, ஓவியம் இப்படி எதனோடு வேண்டுமானாலும் இணைந்து இருக்கலாம். NFT அந்த பிரதியின் உண்மைத்தன்மையைக் குறிக்கும் டோக்கன். அதை உருவாக்கிய கலைஞரின் கையெழுத்து அதில் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும். இப்படி எளிமையாக சொல்லலாம், டிஜிட்டலில் கிடைக்கும் தனித்துவமான படைப்பிற்கு வழங்கப்படும் சான்று.

கிரிப்டோ காயின்

அது என்ன பரிமாற்ற முடியாத டோக்கன் என்றால். பணத்திற்கு இன்னொரு பணத்தை கொடுத்து பரிமாற்றம் செய்ய முடியும். ஆனால் NFT டோக்கன்களுக்கு பொதுவான மதிப்பில்லை என்பதால் ஒரு NFT டோக்கனுக்கு இன்னொரு NFT டோக்கனைப் பரிமாற்றம் செய்ய முடியாது. கிரிப்டோ நாணயங்களுக்கு பதில் இவை விற்பனை செய்யப்படுகின்றன. எதற்கு ஒருவர் NFT வாங்க வேண்டும். தோழா படத்தில் கார்த்தி வரையும் ஓவியத்திற்கு பிரகாஷ்ராஜ் விலை கொடுப்பாரே. அது போல சிலர் தங்களின் கலெக்ஷன்களுக்காவும் இன்னும் சிலர் அவற்றை வாங்கி வைத்திருந்து விலையேறும் போது விற்பதற்காகவும் வாங்கி குவிக்கிறார்கள். எதிர்பார்க்காத அளவில் கஷாலியின் செல்ஃபிகள் விற்றுத் தள்ளின. இது ஒரே இரவில் நடக்கவில்லை எனினும் இந்தோனசியாவின் பிரபலம் ஃசெப் பகிர்ந்த பிறகு நூற்றுக்கணக்கில் மக்கள் ஆர்வம் காட்டினார்.

“என்னுடைய படத்தை யாரும் வாங்குவார்கள் என்று நான் நம்பவில்லை. அதனாலேயே மூன்று டாலர் என விலை நிர்ணயித்தேன்” என்கிறார் கஷாலி. ஈத்தர் எனும் கிரிப்டோ மதிப்பில் 0.247 (806 டாலர்) அளவிற்கு ஒரு செல்ஃபி விற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 317 ஈத்தருக்கு (1 மில்லியன் டாலர்) 1000 செஃல்பிகள் விற்றுள்ளன. இந்தப் பணம் எப்படி கிடைத்தது என்பதை பெற்றோரிடம் சொல்வது குறித்து தயங்கி இருக்கிறார் கஷாலி. “என்னுடைய படத்தை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். தயவு செய்து அவமதிக்க மட்டும் செய்துவிடாதீர்கள். நான் உங்களை நம்புகிறேன், பத்திரமாக என் படங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்.” என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுக்கிறார் இளம்வயது மில்லியனர். செல்ஃபிக்கு இத்தனை மதிப்பா என நாம் வியந்து நிற்கும் போது, அனிமேஷன் ஸ்டூடியோ ஆரம்பிக்க இருப்பதாக சொல்கிறார் கஷாலி.



source https://www.vikatan.com/technology/international/indonesian-student-earns-1-million-by-selling-his-nft-selfies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக