Ad

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

ரூ. 21,000 கோடி ஹெராயின் சிக்கிய விவகாரம்: களத்தில் இறங்கியது அமலாக்கத்துறை!

செப்டம்பர் 13-ம் தேதியன்று குஜராத், முந்த்ரா துறைமுகத்தில் வருவாய் புலனாய்வுத்துறை (டி.ஆர்.ஐ எனப்படும் டைரக்டரேட் ஆஃப் ரெவின்யூ இன்டலிஜென்ஸ்) அதிகாரிகள் இந்தியாவிலேயே முதன்முறையாக ரூ.21,000 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்துவருகின்றன. அந்த ரெய்டில் கிடைத்த தகவல்களைவைத்து, டெல்லி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டா, குஜராத் மாநிலத்தில் அகமதாபாத், கட்ஜ் மாவட்டத்திluள்ள மாண்ட்வி, காந்திதாம் ஆகிய ஊர்கள், சென்னை, கோவை, விஜயவாடா உள்ளிட்ட பல ஊர்களிலுள்ள முக்கிய நபர்களின் இடங்களில் ரெய்டு நடத்தினர்.

ஹெராயின் வழக்கில் கைதான தம்பதியர் தங்கியிருந்த வீடு

டெல்லியிலுள்ள குடோன் ஒன்றில் 16.1 கிலோ ஹெராயின் சிக்கியுள்ளது. நொய்டாவிலுள்ள குடியிருப்புப் பகுதியில் ஒரு வீட்டிலிருந்து 11 கிலோ ஹெராயின், 10.2 கிலோ கொகெய்ன் ஆகியவை பிடிபட்டுள்ளன. மற்ற ஊர்களில் நடந்த ரெய்டுகளில் சிக்கிய போதைப்பொருள்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர விசாரணையில் இருப்பதால், அவை பற்றிக் கருத்து சொல்ல மறுத்துவிட்டார்கள். போதப்பொருள்கள் சிக்கிய இந்த விவகாரத்தில் ஆப்கன் நாட்டு பிரஜை, உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டு பிரஜை உள்ளிட்ட எட்டு பேரை இதுவரை கைதுசெய்துள்ளனர். இந்தநிலையில், டெல்லியிலுள்ள மத்திய அரசின் அமலாக்கத்துறை (என்ஃபோர்ஸ்மென்ட் டைரக்டரேட்) இயக்குநர் சஞ்சய் மிஸ்ரா அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டியிருக்கிறார்.

`ரூ. 21,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் சட்டவிரோதமாகன முறையில் குஜராத் துறைமுகத்துக்கு வந்திருக்கிறது. நிச்சயமாக, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரமுகர்கள் சட்டவிரோதமான முறையில் பணப் பரிவர்த்தனை செய்திருப்பார்கள்.

Also Read: ரூ.21,000 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல்; வெளிநாட்டு அழைப்புகள்! - சென்னை தம்பதி சிக்கியது எப்படி?

இது தொடர்பாக, வருவாய்ப் புலனாய்வுத்துறையிடமிருந்து தகவல்கள் வந்துள்ளன. அதைவைத்து, அமலாக்கத்துறையினரும் விசாரணையில் இறங்கவும்'' என்று உத்தரவிட்டிருக்கிறார்.

அதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகளும் தற்போது விசாரணையில் இறங்கியுள்ளனர்.



source https://www.vikatan.com/news/crime/enforcement-directorate-officers-also-investigating-in-connection-with-rs21000-crores-heroine-seized-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக