Ad

வியாழன், 1 அக்டோபர், 2020

``முதல்வர் யோகி பாராட்ட அழைப்பதாக நினைத்தேன். ஆனால்..." - டாக்டர் கஃபீல் கான் பேட்டி

2017-ம் ஆண்டு உ.பி மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் உயிரிழக்க நேர்ந்தது. அப்போது குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற ஆக்ஸிஜன் வேண்டி டாக்டர் கபீல் போராடி அலைந்த வீடியோ வைரலானது. அடுத்த சில தினங்களிலேயே, இந்த விபத்துக்குக் காரணமே அவர்தான் எனக் குற்றம் சுமத்தப்பட்டு கஃபீல் கான் உட்பட எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுப் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர்.

அதன்பிறகு, நடந்த விசாரணையில் குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் ஒன்பது மாதங்கள் கழித்து கஃபீல் கான் விடுவிக்கப்பட்டார். ஆனால், பணியிடை நீக்கம் மட்டும் திரும்பப் பெறப்படவில்லை. பின்னர் உத்தரப்பிரதேச அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கத் தொடங்கிய கஃபீல் கான், மருத்துவ உலகின் அநீதிகளுக்கு எதிராகக் குரல் எழுப்பினார்.

டாக்டர் கஃபீல் கான்

அதன்பின் கைது நடவடிக்கைகள்... செய்யாத குற்றத்திற்காக ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட நாள்களைச் சிறையில் கழித்துவிட்டு, செப்டம்பர் மாதம் விடுதலையாகியிருக்கிறார். ட்விட்டர் வழியே தொடர்புகொண்டு 'பேட்டி' என்றதும் சம்மதித்தார். "எனக்காகக் குரல் கொடுத்த தமிழ் மக்களுக்கு நன்றிகள்" எனத் தொடங்கியவர், நம் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

"எப்படி இருக்கிறீர்கள்?"

"உடலளவிலும் உளவியல் ரீதியாகவும் மிகவும் சோர்ந்து போய், பலவீனமாக இருக்கிறேன். ஆனால் நம்பிக்கையோடு இருக்கிறேன். மூன்றாண்டுக் காலமாக ஏராளமான கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கிறேன்."

"உ.பி அரசு உங்கள்மீது குற்றம் சுமத்தியது ஏன்?"

"அந்த வீடியோ வெளியானதும் அத்தனை ஊடகங்களும் மருத்துவமனை வாசலில் முகாமிட்டிருந்தார்கள். அப்போதுதான் உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அங்கு வந்தார். வந்ததும் 'டாக்டர் கஃபீல் யார்? அவரை அழைத்து வாருங்கள்' என்றார். உண்மையில் அவர் பாராட்ட அழைக்கிறார் என்றுதான் நினைத்துச் சென்றேன். கோபமாக என்னைப் பார்த்தவர், 'ஓடி ஓடி சில ஆக்ஸிஜன் சிலிண்டர் எடுத்து வந்தால், நீங்க என்ன பெரிய ஹீரோவா?' என்றார்.

அவ்வளவுதான், அந்த சில வரிகளில் என் வாழ்க்கையே மாறிவிட்டது. நான்தான் அந்த நிகழ்வுக்குப் பொறுப்பானவன், துறை மேலாளர், சீனியர் அதிகாரி என்றெல்லாம் ஊடகங்கள் எழுதின. கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.

யோகி ஆதித்யநாத்

சிறையிலிருந்து வெளிவந்ததும், இந்தக் குழந்தைகளின் மரணத்திற்கு யார் காரணம் என்ற கேள்வியைத் தொடர்ந்து கேட்டேன். மருத்துவமனைக்கும் அரசுக்கும் எதிராகச் செயல்படுவதாகப் புகார் செய்து, துறை விசாரணை நடந்தது. அப்போதும், என்மீது தவறில்லை என நிரூபணம் ஆனது.

ஒருநாள் மும்பை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டேன். மூன்று நாள்கள் என் கண்களையும் கைகளையும் கட்டி வெவ்வேறு இடத்திற்கு மாற்றிக்கொண்டே இருந்தார்கள். பலமுறை தாக்கப்பட்டேன். இனி பிழைக்கப்போவதில்லை என நினைத்த போதுதான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதியிடம், நான் பேசிய 40 நிமிட உரையில் 2 நிமிடம் எடிட் செய்யப்பட்ட உரையை மட்டுமே காட்டினார்கள். சிறையிலடைக்கப்பட்டேன்."

> "2017, கோரக்பூரில் குழந்தைகள் பலியான சம்பவத்தன்று என்ன நடந்தது?"

> "சிறை வாழ்க்கை எப்படி இருந்தது?"

> "உங்கள் குடும்பத்தினர் இவ்வளவையும் எவ்வாறு எதிர்கொண்டனர்?"

> "இப்போது எங்கே இருக்கிறீர்கள்?"

> "அரசியலில் ஈடுபடுவீர்களா?"

- இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன் முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > குழந்தைகளைக் காப்பாற்றியதுதான் குற்றமா? https://bit.ly/33j7TZu

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV



source https://www.vikatan.com/government-and-politics/politics/dr-kafeel-khan-exclusive-interview-about-the-issues-surrounding-him

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக