Ad

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

IPL 2020: பௌலர்கள் சாதித்த டபுள் சூப்பர் ஓவர் மேட்ச்; T22 ஆக மாறிய #MIvKXIP

சண்டேன்னா இரண்டு போட்டி எனத் தெரியும். ஆனால், இப்படியானதொரு போட்டி இனி எத்தனை நாள்கள் கழித்து நடக்கும் என தெரியவில்லை. டபுள் சூப்பர் ஓவர், சீட் எஜ் த்ரில்லர் எனப் பக்கா காம்பினேஷன் இந்தப் போட்டி.
#MIvKXIP

இன்றைய மும்பை வெர்சஸ் பஞ்சாப் போட்டியை முதல் இடத்தை நோக்கிச் செல்லும் போட்டியாக மும்பையும், கடைசி இடத்திலிருந்து மேலே வருவதற்கான போட்டியாக பஞ்சாபும் எடுத்துக்கொண்டது. இரண்டு அணிகளிலுமே எந்த மாற்றமும் இல்லை. டாஸ் வென்ற ரோஹித் பேட்டிங் தேர்வு செய்தார். இந்த சீசனின் இந்த இரண்டு அணிகளுக்கான முந்தைய ஆட்டத்தை மும்பை 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

ரோஹித்தும், டிகாக்கும் இறங்க மீண்டும் முதல் ஓவரை வீச வந்தார் மேக்ஸி. முதல் ஓவரில் வெறும் 6 ரன்கள். ஆட்டத்தின் மூன்றாவது ஒவரிலேயே ரோஹித்தை போல்டாக்கி வெளியேற்றினார் அர்ஷ்தீப் சிங். அடுத்த ஓவரிலேயே ட்க அவுட் ஆனார் சூர்யகுமார் யாதவ். இந்த சீசனில் மூன்று 30+ ரன்கள் (இரண்டு அரைசதங்கள்) அடித்திருந்தாலும், சூர்யகுமாரின் கன்சிஸ்டென்ஸி தொடர்ந்து கேள்விக்குறியாக இருக்கிறது. பவர்பிளே முடிவதற்குள்ளாகவே இஷான் கிஷனையும் இழந்தது மும்பை. 3 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது மும்பை. பவர்பிளேவுக்குள் மூன்று விக்கெட்டுகளை மும்பை இழப்பது இந்தத் தொடரில் இதுவே முதல் முறை.

#MIvKXIP

க்ரூணால் பாண்டியாவும், டி காக்கும் ரிஸ்க் இல்லாத ஷாட்டுகளாக ஆடத் தொடங்கினார். நான்கு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என நன்றாக செட்டிலாந க்ரூணால அட்டகாசமாக கேட்ச் செய்து அவுட்டாக்கினார் தீபக் ஹூடா. மீம்களில் வைரலான லுக்கில்தான் இன்றும் சில பந்துகளை ஆடினார் க்ரூணால். சந்தித்த முதல் பந்தையே சிக்ஸுக்கு அனுப்பி, ̀அண்ணண்டா தம்பிடா' என கெத்து காட்டினார் சீனியர் பாண்டியா. அஷ்வினின் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என அடித்து நான்காவது அரைசதம் கடந்தார் டிகாக். அடுத்த ஓவரிலேயே ஹர்திக் பாண்டியாவும் அவுட்.

இந்த சீசனில் பஞ்சாபின் மோசமான பௌலர் என்றால் அது கிறிஸ் ஜோர்டன்தான். எக்கானமியும் பத்துக்கு மேல். டிகாக் ஆடிய தவறான ஷாட், கிறிஸ் ஜோர்டனுக்கு சீசனின் இரண்டாவது விக்கெட்டை பரிசளித்தது. இனி இழப்பதற்கு எதுவுமில்லை வந்த பந்தையெல்லாம் அடித்து ஆடினர் பொல்லார்டும், நைலும். கடைசி மூன்று ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்து, விக்கெட் எதுவும் எடுக்காமல், பஞ்சாப் பழைய மோடுக்கு போனது. இம்புட்டு நேரமா நல்லாத்தான போய்க்கிட்டு இருந்துச்சு என நினைத்திருப்பார் கேலரியில் அமர்ந்திருந்த ப்ரீத்தி ஜிந்தா.

#MIvKXIP

மும்பை இந்த சீசனில், அனைத்துப் போட்டிகளிலுமே வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்புடன் ஆடுகிறது. அதிலும், சூர்யகுமார், இஷான் கிஷன், பொலார்டு, பாண்டியா சகோதரர்கள் என எல்லோருமே பேட்டிங்குக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள். ஆல் ரவுண்டு பெர்பாமன்ஸ் என்றால் அது மும்பைதான். 6 விக்கெட் போனபின்பும், பொலார்டும், நைலும் இணைந்து 21 பந்துகளில் 57 ரன்கள் இந்தப் போட்டியில் எடுத்ததெல்லாம், மும்பைக்கு மட்டுமே சாத்தியம். தொடர்ச்சியாக சரியான வீரர்களைத் தேர்வு செய்து, அணியின் பேலன்ஸ் குறையாமல் பார்த்துக்கொள்கிறது மும்பை.

176 ரன்களைக் கடந்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கினர் மயாங்க் அகர்வாலும், கே எல் ராகுலும். போல்ட் வீசிய மூன்றாவது பந்திலேயே மயாங்க் அவுட். அவுட்சைட் எட்ஜ் பந்து கீப்பர் கேட்ச் ஆனது. போல்ட் மயாங்க் வரை ஓடிச் சென்று அவுட் என முறையிட்டார். ஆனால் ரோஹித் DRS கேட்காததால், தப்பித்தார் மயாங்க். பேட்ஸ்மேன்கள் எப்போதுமே வீக் லிங்க் பௌலர்களைத் தேர்வு செய்வார்கள். ஆனால், ராகுலோ, போல்ட்டை தேர்வு செய்தார். ஆஃப் சைடு, லெக் சைடு, ஸ்டிரெய்ட், ஆஃப் சைடு என நாலாப் பக்கமும் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் அடித்தார் ராகுல். பும்ரா வந்த வேகத்தில் இன்சைடு எட்ஜில் மயாங்கை போல்டாக்கினார். மயாங்கை அவுட் ஆக்குவதில் ஸ்பெஷலிஸ்டாகி விட்டார் பும்ரா. பும்ரா மயாங்குக்கு வீசிய நான்கு இன்னிங்ஸில் 2 ரன்கள் மட்டுமே மூன்றுமுறை அவுட்டாக்கியிருக்கிறார் பூம் பூம் பூம்ரா.

#MIvKXIP

போல்ட் வீசிய அடுத்த ஓவரில் மீண்டும் பவுண்டரி, சிக்ஸர் அடித்து பவர்பிளே முடிவில் பஞ்சாபை 51 ரன்கள் எடுக்க வைத்திருந்தார் ராகுல். ஓவருக்கு ஒருமுறை பவுண்டரி லைனைத் தோட்டுக்கொண்டிருந்த கெயில், அட ராகுல் சஹார் என ஓங்கி அடிக்க, லாங்க் ஆஃபில் அதைக் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார் போல்ட். இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர் என வழக்கம் போல அதிரடி காட்டிவிட்டு அவுட்டானார் பூரன். ராகுல் சஹார் ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்து, அரைசதம் கடந்தார் ராகுல். இந்த சீசனில் 500 ரன்களைக் கடந்த முதல் வீரர் ராகுல்தான். மூன்று சீசன்களாக தொடர்ந்து 500+ அடித்த ஒரே நபரும் ராகுல்தான்.

பஞ்சாப் அணியின் வாழ்ந்து கெட்ட ஜமீன் மேக்ஸி என்ட்ரி. மேக்ஸி சிக்ஸ் அடிக்காத இன்னிங்ஸைக் கண்டுபிடிக்க முடியாத காலம் மாறி, இந்த சீசனில் ஒரு சிக்ஸ் கூட அடிக்காத பிளேயராக மாறியிருந்தார். இந்தப் போட்டியிலும் எந்த மாறுதலும் இல்லாமல் அதே கன்சிஸ்டென்ஸி தொடர்ந்தது. அந்த பாலை அப்படி அடிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. குறைந்தபட்ச பொறுப்பில்லாத மற்றுமொரு ஆட்டம்.

#MIvKXIP

அத விடுங்க, பதினெட்டாவது ஓவர்ல, ராகுலை பும்ரா போல்டாக்குறாப்ல. அட்டகாசமான இன்னொரு இன்னிங்ஸ். ஆனால், இந்த முறையும் அவரால், ஆட்டத்தின் இறுதிவரை நிலைக்க முடியவில்லை. அப்படியே லாஸ்ட் ஓவர் ஜம்ப் பண்றோம். 9 ரன்கள் தேவை. ஐதராபாத் கொல்கத்தா மேட்ச் சூப்பர் ஓவர்தான். அப்ப இதுவும் சூப்பர் ஓவர்தான். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட, ஜோர்டன் முதல் ரன்னை ஒழுங்காக ஓடிவிட்டு இரண்டாவது ரன்னுக்கு உலகத்தைச் சுற்றி யூ டர்ன் போட்டு ஓட, அவர் ரன் அவுட்டானார். அதற்கு முந்தைய பந்து ஒய்டு என்கிற சர்ச்சை எழுந்தது. ஆனால், அது கரெக்ட்டான பால்தான்.

ஆட்டம் இனிதான் ஆரம்பம்!

இந்த சீசனில், பஞ்சாப் சந்திக்கவிருக்கும் இரண்டாவது சூப்பர் ஓவர் இது. சூப்பர் ஓவர்னா வேற யாரு, பும்ராதான் என்பது போல், மும்பை அவரைக் களமிறக்கியது. பஞ்சாப் சார்பாக ராகுலும், பூரனும் இறங்கினார்கள்.

0.1 லோ ஃபுல் டாஸ். ராகுல் சிங்கிள்.

0.2 அட்டகாசமாக அனுகுல் ராய் ரிவர்ஸில் ஓடி கேட்ச் பிடிக்க, பூரன் டக் அவுட். டெல்லிக்கு எதிரான சூப்பர் ஓவரிலும் பூரன் டக் அவுட். எப்படி பூரன் இப்படி?!

0.3 மீண்டும் ஒரு லோ ஃபுல் டாஸ். ராகுல் மீண்டும் சிங்கிள்.

#MIvKXIP

0.4 இரண்டு ரன் ஓட வாய்ப்ப்பிருந்தும், ராகுல் மறுக்க, சிங்கிளோடு நான் ஸ்டிரைக் எண்டில் நின்று கொண்டார் தீபக் ஹூடா.

0.5 அட்டகாசமான யார்க்கர். இரண்டு ரன்கள் ஓடினார் ராகுல்.

0.6 ராகுல் ரிவர்ஸ் ஸ்கூப் எல்லாம் முயல, மீண்டும் ஓர் அட்டகாச யார்க்கர். ராகுல் எல்பிடபிள்யூ.

பஞ்சாப் 5/2

6 ரன்கள் எடுத்தால் வெற்றி. ஷமியை விட்டால், பஞ்சாபுக்கு வேற லர்கூட கிடையாது. ஆனால், ஐந்து ரன்னை எப்படி டிஃபெண்டு செய்வது. ஆனாலும் அசத்தினார் ஷமி!

0.1 முதல் பந்தை ஸ்கூப் ஷாட் அடிக்க முயல, அது இன்ஸைடு எட்ஜாகி பேடில் பட, ஒரு ரன்.

0.2 ரோஹித் ஒரு ரன்.

0.3 டி காக் ஒரு ரன். எல்லாமே அடிக்க முடியாத பந்துகள். ஒய்டு யார்க்கர். கலக்கினார் ஷமி.

#MIvKXIP

0.4 அட்டகாசமான ஒரு யார்க்கர். ரன் ஏதுமில்லை.

0.5 ரோஹித் ஒரு ரன்.

கடைசி பந்து 2 ரன் வேண்டும்

0.6 டி காக் இதை கவர்ஸ் பக்கம் அடித்துவிட்டு இரண்டாவது ரன்னுக்குத் திரும்ப ரன் அவுட் செய்யப்பட்டார்.

இரண்டு அணிகளுமே 5 ரன்கள்.

மீண்டும் ஆட்டம் சூப்பர் ஓவருக்குப் போனது. ஒரே ரூல். ஏற்கெனவே விளையாடிய வீரர்கள் விளையாட முடியாது. ஆக, பும்ரா, ஷமி, ராகுல், ஹூடா, டி காக், ரோஹித், பூரன் அவுட்.

இப்போது மும்பை பேட்டிங் ஆட வந்தது. பொலார்டும், ஹார்டிக் பாண்டியாவும் ரெடி ஆனார்கள். பஞ்சாபில் பௌலர்கள் இல்லை என்பதுதான் கொடூரம். இந்த சீசனில் 11 எக்கானமி வைத்திருக்கும் கிறிஸ் ஜோர்டான் அழைக்கப்பட்டார்.

#MIvKXIP

0.1 யார்க்கர் பொல்லார்டு 1 ரன்

0.2 ஒய்டு

0.2 மற்றுமொரு யார்க்கர் லைனில் லோ ஃபுல் டாஸ் பாண்டியா 1 ரன்

0.3 அவுட்சைடு ஆஃபில் வந்த பந்தை கவர்ஸுக்கு அனுப்பினார் பொல்லார்டு. 4 ரன்கள்.

0.4 மற்றுமொரு ஒய்டு

0.4 இல்லாத இரண்டாவது ரன்னுக்கு பாண்டியா ஓட, ரன் அவுட்டானார்.

0.5 அவுட்சைட் ஆஃபில் மீண்டும் ஒரு பால். ரன் இல்லை. விக்கெட் என பஞ்சாப் முறையிட, ரிவ்யூ சென்று தன்னைக் காப்பாற்றினார் பொல்லார்டு

0.6 ஒரு சிக்ஸ்... அடிக்க ட்ரை செய்தார்கள்! போட்டியின் நாயகன் மயாங்க்தான். வில்லி, பிளெஸ்ஸி ஸ்டைலில் தாவிப் பிடித்து அந்த பந்தைத் தடுத்தார். இரண்டே ரன்கள்!

11/1. 12 ரன்கள் எடுத்தால் வெற்றி

Also Read: மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் போட்டி; சம்பவம் செய்த ஃபெர்கூசன்... வெற்றியை மிஸ் செய்த ஐதராபாத்! #SRHvKKR

#MIvKXIP

போல்ட் வீச, கெயிலும், மயாங்கும் பேட்டிங்...

0.1 ஸ்கிரீனிலயே ஒரு இமாலய சிக்ஸை வெளுத்தார் கெயில்.

0.2 சிங்கிள்.

0.3 மிட் ஆஃப் திசையில் மயாங்க் ஒரு பவுண்டரி.

0.4 மிட் விக்கெட் திசையில் அடுத்த பவுண்டரி.

கிட்டத்தட்ட 5 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் பஞ்சாப் வெற்றியை ருசித்தது.

ஆட்ட நாயகனாக ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-finally-after-two-super-overs-punjab-tastes-success-versus-mumbai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக