கேரள மாநிலம் திருவனந்தபுரம் காட்டாக்கடை பகுதியை சேர்ந்த ஜோசப் ஜான் என்பவர் தனது மூன்றாவது மனைவி எஸ்தருடன் நேற்று முன்தினம் இரவு களியக்காவிளை பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவர்களிடம் இருந்த ஐந்து வயது குழந்தை விடாமல் அழுதுகொண்டிருந்தது. எட்டு வயதுடைய மற்றொரு சிறுவனும் அங்கு நின்றுகொண்டிருந்தான். பெண் குழந்தையின் அழுகையை அங்கு ரோந்து சென்ற களியக்காவிளை இன்ஸ்பெக்டர் எழிலரசி கவனித்தார். சந்தேகம் அடைந்த இன்ஸ்பெக்டர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் ஜோசப் ஜாண் அந்த பெண் குழந்தையை கர்நாடகா மாநிலம்.பெங்களூரில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜோசப் ஜாண் மற்றும் அவரது மனைவி எஸ்தர் மற்றும் இரண்டு குழந்தைகளையும் களியக்காவிளை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த எட்டு வயது சிறுவனின் பெயர் ஜோபின் என்றும். அவன் ஜோசப் ஜானின் இரண்டாவது மனையின் மகன் என்பது தெரியவந்தது. ஐந்து வயது சிறுமியின் பெயர் ரோஹிதா என்றும் தெரியவந்தது. ரோஹிதாவை பெங்களூரில் வைத்து காணவில்லை என குழந்தையின் தாய் கார்த்திகேஸ்வரி உப்பர்பேட்டா காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் அளித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் கர்நாடகா காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
மேலும் எட்டு வயது சிறுவனின் தாய்க்கும் தகவல் அளித்தனர். அவர் வரும் வரை சிறுவனை காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்க குமரி போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே கர்நாடகா போலீஸ் மற்றும் சிறுமியின் தாய் கார்த்திகேஸ்வரி ஆகியோர் நாகர்கோவிலுக்கு இன்று வந்தனர். கார்த்திகேஸ்வரி அது தனது குழந்தை என அடையாளம் காட்டினார். அந்த குழந்தையும் தாயிடம் சென்றது. இதையடுத்து கர்நாடக காவல்துறை அதிகாரிகளிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
கர்நாடகா காவல்துறை குழந்தை கடத்தப்பட்டது குறித்து ஏற்கெனவே வழக்கு பதிவு செய்துள்ளதால் குழந்தையை கடத்தி வந்த ஜோசப் ஜான் மற்றும் எஸ்தர் ஆகியோரும் கர்நாடக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ரோட்டோரம் நின்ற சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கிகொடுத்து ஜோசப் ஜான் கடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. ஜோசப் ஜாணுக்கு வேறு கடத்தல்களில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து கர்நாடகா போலீஸார் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.
Also Read: `ஐஸ்க்ரீம் வாங்கிக்கொடுத்து சிறுமியைக் கடத்தினேன்!' - அதிரவைத்த சிறுவன்; சிக்கிய கேரளத் தம்பதி
source https://www.vikatan.com/news/crime/bengaluru-girl-rescued-in-kaliyakkavilai-reunited-with-parents
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக