Ad

வியாழன், 1 அக்டோபர், 2020

ஐடி துறையில் என்னென்ன வேலைவாய்ப்புகள்? மோட்டார் விகடன் நடத்தும் ஆன்லைன் பயிலரங்கம்!

இன்டர்நெட் கார், கனெக்ட்டட் கார் என்று விற்பனைக்கு வரும் பல கார்களும் தொழில்நுட்பத்தில் பல படிகள் முன்னே இருக்கின்றன. மெமரி சீட்ஸ், ஆட்டோ பார்க்கிங், ஜியோஃபென்சிங், டைம் ஃபென்சிங் என்று டிரைவர் செய்யும் வேலையை மட்டுமல்ல... டிரைவரைக் கண்காணிக்கும் செக்யூரிட்டி நிறுவனம் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம்கூட இப்போது கார் புத்திசாலித்தனமாகச் செய்கிறது. அதனால்தான் தங்கள் காரை இன்டெலிஜென்ட் கார் என்று பல கம்பெனிகள் விளம்பரப்படுத்துகிறார்கள். இதன் பின்னால், மெஷின் லேர்னிங், டேட்டா அனெல்டிக்ஸ், ஆர்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸ் என கண்ணுக்குத் தெரியாத பல தகவல் தொழில்நுட்பங்கள் வியாபித்திருக்கின்றன.

கார்களுக்கு மட்டுமல்ல, கனடா நாட்டைச் சேர்ந்த பம்பார்டியர் விமானத்தைத் தயாரிக்கும் கம்பெனிக்கே இதுபோன்ற பல தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி, செயல்பாட்டுக்கும் கொண்டுவந்த நிறுவனம் டெக் மஹிந்திரா. நடுவானில் விமானத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டுவிட்டால், விமானத்தில் இருக்கும் எந்த உதிரிபாகம் பழுதடைந்திருக்கிறது என்பதை விமானமே கண்டுபிடித்து, அருகில் இருக்கும் தகவல் கட்டுப்பாட்டுக்குத் தெரிவித்துவிடும். பழுதான அந்த விமானம் எமெர்ஜென்ஸி லேண்ட் ஆன உடனேயே தயாராக இருக்கும் அந்த உதிரிபாகத்தை மாட்டிக் கொண்டு விண்ணுக்கு உடனே கிளம்பிவிடும். இது போன்ற சமய சஞ்சீவியான பல புதிய தொழில்நுட்பங்களை பம்பார்டியர் செயல்படுத்த, அதற்குப் பக்கபலமாக இருக்கும் டெக் மஹிந்திராவுக்கு, மென்பொருள் தொழில் வளர்ச்சி பற்றியும் வேலை வாய்ப்புகள் பற்றியும் உலகளாவிய பார்வை இருக்கிறது.

Job Opportunities in IT Industry
சரி, இதையெல்லாம் ஏன் இங்கே சொல்கிறீர்கள் என்பது உங்கள் கேள்வியானால்... மோட்டார் விகடன் அடுத்து நடத்தவிருக்கும் பயிலரங்கம் எதைப் பற்றியது என்பதையும், யாரோடு சேர்ந்து இந்த பயிலரங்கத்தை நடத்த இருக்கிறோம் என்பதையும் சொல்வதற்கான ஒரு இன்ட்ரோதான்.
ஆம். நீங்கள் யூகித்தது சரிதான். B.E./B.Tech படித்த அல்லது படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, ஐடி துறையில் என்ன மாதிரியான வேலை வாய்ப்புகள் எல்லாம் இருக்கின்றன... அந்த வேலைகளுக்கான தகுதிகள் என்னென்ன என்பதை எடுத்துச் சொல்வதுதான் Job Opportunities in IT Industry என்ற இந்தப் பயிலரங்த்தின் நோக்கம்.
Tech Mahindra

இந்த கம்பெனியின் அமெரிக்கச் செயல்பாடுகளை முன்னின்று நடத்தும் 'என்டர்பிரைஸ் பிசினஸ்' பிரிவின் தலைவராக இருப்பவர் லக்‌ஷ்மணன் சிதம்பரம். "கொரோனா பல புதிய சவால்களை முன்னிறுத்தியிருக்கிறது என்பது உண்மையே. ஆனால், அதே சமயம். நடக்க வேண்டிய பல தொழில்நுட்ப வளர்ச்சிகளை கொரோனாவால் உண்டான விழிப்புஉணர்வு துரிதப்படுத்தியிருக்கிறது. 'வொர்க் ஃப்ரம் ஹோம்' என்பது வாழ்க்கையில், 'வொர்க்-லைஃப் பேலன்ஸைக்' கொண்டுவந்திருக்கிறது. அதே சமயம் களைப்பு தரும் பயணங்களையும் போக்குவரத்துகளையும் குறைத்து செயல் திறனைக் கூட்டியிருக்கிறது. இந்தப் புதிய மாற்றங்களால் வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் திறமையான பல இளம் தாய்மார்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன. வங்கிச் சேவைகளைப் பெறுவது துவங்கி, ஆன்-லைனின் பொருட்களை வாங்குவது வரை பலரும் வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் வர்த்தகத்தில் ஈ-காமர்ஸின் விகிதம் அதிகரித்திருக்கிறது. இதுபோன்ற வளர்ச்சிகளால் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகளுக்கான பல புதிய கதவுகள் திறந்திருக்கின்றன" - எப்போதும் இப்படி பாசிட்டிவ் எனர்ஜியோடு மட்டுமே பேசும் லக்‌ஷ்மணன் சிதம்பரம், பிஇ மற்றும் பிடெக் பட்டதாரிகளோடு தனது துறையில் இருக்கும் வேலை வாய்ப்புகள் பற்றி ஏராளமான சூட்சுமங்களைப் பகிந்து கொள்ள இருக்கிறார்.

திறமையான இளைஞர்களை வளர்தெடுப்பதையே தன் உபதொழிலாகச் செய்து வருபவர் ஶ்ரீராம் கிருஷ்ணன். ஐஐடி சென்னை, ஐஐஎம் அஹமதாபாத் போன்ற கல்விக் கேந்திரங்களில் எல்லாம் படித்துத் தேர்ந்துவிட்டு, டெக் மஹிந்திராவில் டெலிவரி மற்றும் ஆபரேஷன்ஸ் துறையின் தலைவராக இருக்கும் இவர் 'ஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா அனல்டிக்ஸ்' ஆகியவற்றை மட்டுமே சுவாசித்துக் கொண்டிருப்பவர். வளர்ந்து வரும் இந்தத் துறைகளில் பெருகிவரும் வாய்ப்புகள் பற்றி இவரைப்போல வேறு யாராலும் எளிமையாக விளக்க முடியாது. இந்த ஏரியாக்களில் கில்லியாக, ஒருவர் என்ன படிக்க வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும், என்பது பற்றியெல்லாம் தனது முப்பது ஆண்டு அனுபவத்தில் இருந்து இவர் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.

பிட் காயின், கிரிப்டோ கரன்ஸி ஆகியவற்றுக்கெல்லாம் ஆதாரம் பிளாக்செயின். உலகத்திலேயே மிகப் பெரிய பிளாக் செயின் நெட்வொர்க்கைக் கட்டமைத்தவர் என்று பெருமை கொண்ட ராஜேஷ் தூடு. பிளாக் செயின் ஏரியாவின் அசைக்க முடியாத அத்தாரிட்டி. சைபர் செக்யூரிட்டி என்பது இவரது இரண்டாவது கோட்டை. 'புதிதாக வருகிறவர்களைப் புண்படுத்தாதே; பண்படுத்து', என்பதை தன் டேக்லைனாக வைத்திருக்கும் இவர், திறமையான இளைஞர்களை ஊக்குவிப்பதில் உற்சாகம் கொள்பவர்.

அக்டோபர் 11-ம் தேதி நடக்கவிருக்கும் Online Seminar - Job opportunities in IT industry பயிலரங்கத்தில் இவரும் உங்களோடு உரையாட இருக்கிறார்.

நாள்: ஞாயிறு, 11 அக்டோபர் 2020

நேரம்: மாலை 5.00 to 7.00 வரை.

கட்டணமில்லாத இந்த அறிமுகப் பயிலரங்கத்துக்குப் பதிவு செய்ய... https://bit.ly/33FkmWf



source https://www.vikatan.com/automobile/motor/motor-vikatan-online-seminar-regarding-job-opportunities-in-it-industry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக