சீனாவுடனான எல்லைப் பிரச்னையால் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. கிழக்கு லடாக்கில் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் சீன ராணுவம், ஐம்பதாயிரம் வீரர்களைக் குவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. `எல்லைப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா விரும்புகிறது. ஆனால், இந்தியப் பகுதியில் இருந்து ஒரு இன்ச் இடத்தைக் கூட விட்டுத் தரத் தயாராக இல்லை’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியிருந்தார்.
இந்தசூழலில், உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. ரிஷிகேஷின் பர்மர்த் நிகேதன் ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்துகொண்டார். அங்கு கூடியிருந்த பக்தர்கள் முன்னிலையில் பேசிய அஜித் தோவல், பண்பாடு, கலாசாரத்தின் அடிப்படையிலேயே இந்தியா கட்டமைக்கப்பட்டிருப்பதாகவும் மாறாக ஒரு மதத்தின் அடிப்படையிலோ, ஒரு மொழியின் அடிப்படையிலோ அல்ல என்றார். மேலும், இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.
Also Read: Pangong Tso: `பாங்கோங் சோ ஏரி இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?' - சீன ஊடுருவல் முறியடிக்கப்பட்ட பின்னணி!
அவர் பேசுகையில், ``நாம் யாரையும் முதலில் தாக்கியதில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். அதுதொடர்பாக பல கருத்துகள் இருக்கின்றன. இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையில், நாட்டைக் காப்பதற்காக நாம் தாக்குதல் நடத்த வேண்டியது அவசியம்.
நாட்டைக் காப்பதற்காக எதிரிகள் எங்கு விரும்புகிறார்களோ அங்கு போர் புரியத் தயார். அது ஒரு குறிப்பிட்ட இடமாகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயல்ல. அச்சுறுத்தல் எங்கு ஏற்படுகிறது என்று நினைக்கிறோமோ, அங்கு சென்று போரிடுவோம். எங்களது சுயநலன் மட்டுமே அதன் அடிப்படையாக இருக்காது. எங்கள் மண்ணில் மட்டுமல்ல... அந்நிய மண்ணிலும் போரிடத் தயார். அந்தப் போரானது மற்றவர்களுக்கு நலன் பயப்பதாக இருக்கும். சுயநலனை மட்டுமே சார்ந்திருக்காது’’ என்று பேசினார்.
Also Read: `15,000 அடி உயரத்தில் டென்ட்; விதிமீறிய சீனா!- கல்வான் பள்ளத்தாக்கு மோதலின் தொடக்கப்புள்ளி?
அதேநேரம் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் பேச்சு முழுக்க முழுக்க ஆன்மிக அடிப்படையிலானது. சீனாவைக் குறிப்பிட்டு அவர் பேசவில்லை என தேசிய பாதுகாப்பு கவுன்சில் (National Security Council system) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
source https://www.vikatan.com/news/india/will-fight-foreign-soil-also-says-nsa-ajit-doval
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக