Ad

திங்கள், 26 அக்டோபர், 2020

குறைத்த சம்பளத்தை மீண்டும் கொடுக்கத் தொடங்கிய ரிலையன்ஸ்... போனஸூம் உண்டு!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்..!

முகேஷ் அம்பானி தலமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்.ஐ.எல்), குழுமம், அதன் ஹைட்டோகார்பன் பிரிவில் பணிபுரிபவர்களுக்கு குறைக்கப்பட்ட சம்பளத்தை மீண்டும் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. மேலும், சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு போனஸும் கொடுக்கிறது. ரிலையன்ஸ் குழுமத்தில் ஹைட்டோகார்பன் பிரிவில்தான் ஊரடங்கு காலத்திலும் புதிதாக 30,000 பேர் வேலைக்கு எடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

Reliance

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ பணியாளர்களுக்கு ஏற்கெனவே குறைக்கப்பட்ட சம்பளம் 100% அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம், ஆண்டு சம்பளம் ரூ.15 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு சம்பளத்தில் 10%, 2020 ஏப்ரலில் குறைத்தது. இந்தக் குறைக்கப்பட்ட சம்பளத்தை, ஏப்ரல் 1-ம் தேதி முதல் கொடுக்கிறது. ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் ரிலையன்ஸ்-ல் மட்டும் குறைக்கப்பட்ட சம்பளத்தை எப்போது கூட்டுவது என முடிவு செய்யப்படவில்லை எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரானா பாதிப்பால் பல்வேறு நிறுவனங்கள் பரவலாகப் பணியாளர்களின் சம்பளத்தை 10% முதல் 50% வரை குறைத்தன. பல நிறுவனங்களில் பணியாளர்கள் வேலையிழந்தனர்.

பல நிறுவனங்கள் இந்தச் சம்பளக் குறைப்பை நிலைமை சரியானதும் சரி செய்வோம் எனச் சொல்லியிருந்தன.

தற்போது ஊரடங்கு தளர்வு பெருவாரியாக அமலில் உள்ள நிலையில் நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் மேம்படத் தொடங்கியிருக்கின்றன. நிறுவனங்களின் வருமானமும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால், அவை குறைக்கப்பட்ட பணியாளர்கள் சம்பளத்தை அதிகரிக்கும் எண்ணத்தில் உள்ளன. அதைப் பல நிறுவனங்கள் அமல்படுத்ததவும் தொடங்கியிருக்கின்றன.

ரிலயன்ஸ் ஜியோ

சாஃப்ட்வேர் நிறுவனங்கள்..!

ஸொமோட்டோ, அப்கிரேடு, க்ரோஃபெர்ஸ் போன்ற நிறுவனங்களும் குறைக்கப்பட்ட சம்பளத்தை அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன.

முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்களான இன்ஃபோசிஸ், டி.சி.எஸ் போன்றவை கொரானா தீவிர ஊரடங்கு காலத்தில் பணியாளர்களின் சம்பளத்தைக் கொஞ்சம் கூட குறைக்கவில்லை. மேலும், அவை பணியாளர்களை முழுக்க முழுக்க வீட்டிலிருந்தே பணி புரிய அனுமதித்தன. இந்த நிலையில் அவை, வரும் காலாண்டுகளில் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு உடன் பதவி உயர்வும் அளிக்கத் திட்டமிட்டுள்ளன.



source https://www.vikatan.com/business/reliance-industries-rolls-back-salary-cuts

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக