Ad

வெள்ளி, 2 அக்டோபர், 2020

தேனி: குமாரை `கட்’ செய்த தேனி எம்.பி! - மத்திய அமைச்சர் பதவிக்கு பெயர் மாற்றமா?

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்.பி-யுமான ரவீந்திரநாத்குமார், தனது பெயரில் உள்ள `குமார்’ என்ற வார்த்தையை நீக்கியுள்ளார். மேலும், அவரது பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது, `P.RAVEENDRANATH' என எழுதிவந்தார். இதனை, `RAVINDHRANATH' என மாற்றம் செய்துள்ளார். இது தொடர்பாக கெஜட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரவீந்திரநாத்

இவரது தந்தையும், துணைமுதல்வருமான ஓ.பன்னிர்செல்வம், அவரது தந்தை வைத்த `பேச்சிமுத்து’ என்ற பெயரை மாற்றி, பன்னீர்செல்வம் என வைத்துக்கொண்டார். தற்போது, இவரது மகனும், தந்தை வைத்த பெயரில் மாற்றம் செய்துள்ளார்.

Also Read: தேனி: ஓ.பி.எஸ்-ஸுடன் மோதும் தங்க தமிழ்ச்செல்வன்? - தி.மு.க-வில் புதிய பொறுப்பு

ஏன் இந்த திடீர் பெயர் மாற்றம் என ரவீந்திரநாத்தின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம்.``நியூமராலஜி பார்த்து பெயரில் மாற்றம் செய்துள்ளார். டெல்லி வட்டாரத்தில் உள்ள அவரது அரசியல் நண்பர்கள் பெயர் மாற்றம் பற்றி அவரிடம் அறிவுறுத்தியிருக்கலாம். மேலும், அவரது அரசியல் நண்பர்கள் அவரை `ரவீந்திரநாத் ஜி’ என்றே அழைக்கின்றனர். குமாரை விட்டுவிடுவதால், அதனை `கட்’ செய்யக் கூட நினைத்திருக்கலாம்.

கெஜட்டில் வெளியிடப்பட்ட பெயர் மாற்றம்

Also Read: `ஒரே நிகழ்ச்சியில் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்; எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பு!’-அ.தி.மு.க-வில் மாறும் காட்சிகள்

சரியான காரணம் தெரியவில்லை என்றாலும், பெயர் மாற்றம் என்பது சில நன்மைகளைத் தேடித்தரும். அந்த வகையில், நீண்ட நாள் எதிர்பார்ப்பான, மத்திய இணை அமைச்சர் பதவி கிடைக்கலாம். நாங்களும் அதைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்” என்றனர்.



source https://www.vikatan.com/news/politics/theni-mp-raveendranath-made-changes-in-his-name

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக