நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்க்கட்சிகளும் விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த சட்டங்களை ஏற்க மாட்டோம் என விவசாயிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். மத்திய பா.ஜ.க வின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளம் இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமைச்சரவையில் இருந்து விலகியதுடன், கூட்டணியில் இருந்தும் வெளியேறியது.
என்றாலும் மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவான சட்டம் என கருத்து தெரிவித்து வந்தது. இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டத்தை கொண்டுசெல்லவும் ராகுல் காந்தி டிராக்டர் பேரணியில் ஈடுபடவுள்ளார். இந்த தகவலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.
Also Read: `வேளாண் சட்டங்கள் மட்டுமே காரணம் அல்ல!’- பா.ஜ.க-வுடன் 24 வருட கூட்டணி, வெளியேறியது சிரோமணி அகாலிதளம்
கே.சி.வேணுகோபால், இது தொடர்பாக கூறுகையில், ``மக்களின் உரிமைகளுக்காக போராடும் காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க.வால் தடுத்து நிறுத்த முடியாது. வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வலியுறுத்தி பஞ்சாப் முதல் டெல்லி வரை ராகுல் காந்தி கிசான் யாத்ரா என்ற பயணத்தை மேற்கொள்வார்” என்றார். இந்த யாத்திரை ஆனது வரும் 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை பார்க்க சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, ஆகியோர் 144 தடை உத்தரவை காரணம் காட்டி தடுத்து நிறுத்தப்பட்டதுடன் கைதும் செய்யப்பட்டனர். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் கைது நடவடிக்கைக்கு எதிராக இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்,
source https://www.vikatan.com/government-and-politics/politics/rahul-will-travel-from-punjab-to-delhi-in-the-name-of-kisan-yatra
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக