Ad

வெள்ளி, 23 அக்டோபர், 2020

துன்பங்கள் நீக்கி இன்பம் அருளும் ஶ்ரீசாயி சத்யநாராயண பூஜை... கலந்துகொள்வது எப்படி?

வாழ்க்கை இன்பமயமானதாக மட்டும் இருந்தால் ஒருவரும் இறைவனை நினைக்கவே மாட்டார்கள். அதுமட்டுமா... பாவ புண்ணியம் குறித்த விழிப்புணர்வின்றி தங்கள் மனம்போல் நடந்துகொள்வார்கள். இதனால் வலியவர்கள் வாழவும் எளியவர்கள் துன்புறவும் நேரும். ஆனால், கருணைக்கடலான இறைவன் அதை எவ்வாறு அனுமதிப்பார்? அதனால்தான் அவரவர் வினைகளுக்கு ஏற்ற வாழ்வினை இன்ப துன்பங்களோடு அருளினார்.

பாபா

முன் ஜன்ம வினைகளின் தன்மைகளை அறியாமல் துயரங்களால் தடுமாறும் மனிதர்கள் மீதும் இறைவன் காட்டும் இரக்கமே மகான்கள். மகான்கள் இந்த உலகில் இறைவனின் கருணையின் வடிவாக அவதரிக்கிறார்கள். அவ்வாறு மண்ணுலகில் அவதரித்த மகான் ஶ்ரீசாயிநாதர். ஶ்ரீதத்தாத்ரேயரின் மறுபிறப்பாக அவதரித்த ஶ்ரீசாயிநாதர் தன்னை நாடிவந்த பக்தர்களின் வாழ்விலிருந்த துன்பங்களை நீக்குவதோடு அவர்களுக்கான நல்வழியையும் காட்டியருளினார். இதற்கு சாயி சத்சரிதத்தில் ஏராளமான சாட்சிகள் உண்டு. அத்தகைய ஒரு சாட்சி நூல்கர். நூல்கர் பண்டரிபுரத்தில் இருந்த ஒரு நீதிமன்றத்தில் உபநீதிபதியாகப் பணியாற்றியவர். அவர் வேலைபார்த்த நீதிமன்றத்தில் இருந்த ஒரு வக்கீல் தன்னைப் பகுத்தறிவுவாதியாகக் காட்டிக்கொண்டு இறைநம்பிக்கைகளைப் புண்படுத்தி வந்தார்.

கண்கண்ட வைத்தியர் சாயியே!

நூல்கருக்கு ஒரு முறை உடல்நிலை சரியில்லை. சாயிநாதனே தன் நிரந்தர வைத்தியன் என்று மனதில் முடிந்துகொண்டவர் நூல்கர். அதனால் ஷீர்டிக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அப்போது, அவரைத் தேடிவந்த அந்த வக்கீல், "திரு நூல்கர் எங்கே?" என்று கேட்டார். அதற்கு நூல்கரின் குமாஸ்தா, "அவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் ஷீர்டிக்குப் போயிருக்கிறார்" என்று பதில் சொன்னார். அப்போது அந்த வக்கீல் நாலுபேர் இருக்கிறார்கள் என்ற நினைவு இல்லாமல், "உடல் நிலை சரியில்லை என்றால் டாக்டரிடம் தானே செல்ல வேண்டும்... ஏன் ஷீர்டிக்குச் செல்கிறார்? உயர் அதிகாரிகள் எல்லாம் இவ்வளவு மூடநம்பிக்கையோடு இருந்தால் எப்படி?" என்று கத்திவிட்டுச் சென்றார்.

பாபா

ஆனால் காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் என்பதைப் போல அந்த வக்கீலுக்கு ஒரு பெரிய சிக்கல் ஒன்று வந்தது. அதை யார் எப்படித் தீர்த்துவைப்பார்கள் என்றே அவருக்குப் புரியவில்லை. குளம் குழம்பிவிட்டால் நீர் தெளியாது, அதுபோல மனம் குழம்பிவிட்டால் தெளிவான சிந்தனை ஏற்படாது. வக்கீலுக்கு இப்போது அற்புதங்களை எதிர்பார்க்கும் இக்கட்டு நேர்ந்துவிட்டது. கூட இருந்தவர்கள் அவரைத் தேற்றி, ஷீர்டி சென்று வருமாறு அறிவுறுத்தினர்.

வக்கீலும் ஷீர்டி சென்றார். சாயியை தரிசனம் செய்து வணங்கினார். பின்பு சாயி அங்கு இருப்பவர்களிடையே பேசத்தொடங்கினார்.

"உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாதீர்கள். யாரேனும் உடல் நிலை சரியில்லை என்றால் பண்டரிபுரத்திலிருந்து இங்கே வருவார்களா... நான் என்ன வைத்தியனா... டாக்டர்கள் கைவிட்ட பின்பு என்னால் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்... நீங்கள் எல்லாம் நிரம்பப் படித்த்வர்கள். வியாதி முற்றுவதற்கும் மருந்து மாத்திரை சாப்பிட மாட்டீர்களோ?" என்று பேசினார். இதைக் கேட்ட மற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. என்றாலும் அந்த வக்கீலுக்குப் புரிந்துவிட்டது. என்றோ எங்கோ தான் பேசிய சொற்களின் எதிரொலிகள் இவை என்பதை உணர்ந்தார். அவர் உடல் நடுங்கியது. கண்ணீர் பெருக சாயியின் கால்களைப் பற்றிக்கொண்டு, "என்னை மன்னித்துவிடுங்கள் சாயி" என்று கதறினார்.

சுற்றியிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சாயி அவரைத் தன் கரங்களால் தொட்டு எழுப்பி ஆசீர்வதித்தார். அதன்பின் அவர் சாயியின் தீவிர பக்தராகிவிட்டார். அந்த வக்கீல் மட்டுமல்ல, சாயியை வந்து தரிசித்த எவரும் அவரை மறந்ததேயில்லை. அவரின் தீவிர பக்தர்களாகிப் போவார்கள். இது அப்போது மட்டுமல்ல... இப்போதும் நடக்கிறது. சாயியின் திருப்பாதங்களை ஒருமுறை மனமுவந்து வணங்கிவிட்டால் குழந்தையைத் தாய் கைகளில் பற்றிக்கொள்வதைப்போல சாயி உங்களைப் பற்றிக்கொள்வார்.

சாயி சத்யநாராயண பூஜை

மகிமை நிறைந்த ஸ்ரீசாயி சத்யநாராயண பூஜை

சாயிபக்தர்கள் பாபாவுக்கான வழிபாட்டுமுறைகளில் ஒன்றாகக் கடைப்பிடிப்பது ஶ்ரீசாயி சத்யநாராயண பூஜை. பீமாஜிபாட்டில் என்னும் சாயிபக்தர் தனக்கு ஏற்பட்ட நோயை பாபா நீக்கியதைப் போற்றும் வண்ணம் பாபாவுக்கு என்று பிரத்யேகமான சத்யநாராயண பூஜையைச் செய்ய விரும்பினார். அதற்கான விதிகளையும் பூஜை முறைகளையும் வகுத்துத் தருமாறு தாஸ்கணு மகராஜை வேண்டிக்கொண்டார். தாஸ்கணுவும் அந்தக் கோரிக்கையை ஏற்று அந்தப்பூஜை முறையை ஏற்படுத்திக்கொடுத்தார். சாயிபாபா வாழும் காலத்தில் அவருக்கு அவரால் செய்ய அனுமதிக்கப்பட்ட பூஜை ஶ்ரீசாயி சத்யநாராயண பூஜை.

இந்த பூஜையை மேற்கொள்வதன் மூலம் சாயியின் அருள் பரிபூரணமாக நம் குடும்பங்களில் விளங்கும். சாயியின் அருளால் நோய்கள், வறுமை, பயம், தோல்வி ஆகியன விலகி வாழ்க்கை மகிழ்ச்சியும் செழிப்புமாக மாறும் என்பது சாயி அன்பர்களின் நம்பிக்கை. அப்படிப்பட்ட ஶ்ரீ சாயிசத்யநாராயண பூஜையை சக்திவிகடன் வாசகர்களின் நலன்வேண்டி நடத்த இருக்கிறது.

சாயிநாதரின் மகாசமாதி தினமான விஜயதசமி (26.10.20) அன்று இந்த பூஜை நடைபெற உள்ளது. இதில் நீங்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

சரணம்... சாயி சரணம்!

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.250/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஷீர்டி ஸ்ரீசாயிசத்யநாராயணர் பூஜை - சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் நன்மைக்காக வழிபாட்டில் சிறப்புச் சங்கல்பமும் பிரார்த்தனையும் நடைபெறும்.

விஜய தசமித் திருநாளான 26.10.2020 திங்களன்று காலை 9:30 மணியளவில் வழிபாடு தொடங்கும். முன்பதிவு செய்துகொள்ளும் வாசகர்கள் வீடியோ (zoom meet) மூலம் வழிபாட்டை தரிசிக்கலாம். அதற்கான இணைப்பு முகவரி (zoom meet link) முதல் நாளே அதாவது 25.10.2020 ஞாயிறன்று வாசகர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

முன்பதிவு செய்துகொள்ளும் வாசகர்கள், தரிசனத்துக்காக வீடியோ இணைப்பில் இணைவதோடு, அவரவர் வீட்டிலிருந்தபடி வழிபாடும் செய்யலாம். அங்ஙனம் வழிபட விரும்பும் வாசகர்கள், தங்கள் வீட்டில் பூஜைக்குத் தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் பொருள்களுடன் முன்னதாகத் தயாராகிக்கொள்ளவும்.

வாசகர்கள் அவரவர் வீட்டிலேயே வழிபட ஏதுவாக, ஸ்ரீசத்ய நாராயணர், ஷீர்டி ஸ்ரீசாயிபாபா வண்ணப்படங்களும் வழிபாட்டு முறைகள், ஸ்ரீசாயி அஷ்டோத்திர நாமாவளி உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பும் (Pdf வடிவில்) மின்னஞ்சல் மூலம் முன்னதாக அனுப்பிவைக்கப்படும். அவற்றைத் தரவிறக்கம் செய்து பூஜைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அத்துடன், முன்பதிவு செய்துகொள்ளும் வாசகர்களுக்கு ஷீர்டியில் இருந்து விசேஷமாகப் பெறப்பட்ட புனிதம் மிக்க உதிப் பிரசாதம் 1.11.2020 தேதிக்குள் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு: 73974 30999; 97909 90404

நீங்களும் இந்த பூஜையில் கலந்துகொண்டு சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/spiritual/gods/sakthi-vikatan-to-conduct-special-sai-sathyanarayana-poojai-on-vijayadasami-day

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக