சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் சரவணன். இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர், பைக்கில் திருவொற்றியூரிலிருந்து பொன்னேரி நோக்கி சென்றார். அப்போது இலவம்பேடு அருகே சரவணன் சென்றுக் கொண்டிருந்தபோது அவ்வழியாக காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், வழிமறித்தது. பின்னர் அந்தக் கும்பல், சரவணனைக் அரிவாளால் வெட்டியது. அதனால் நிலைத்தடுமாறிய அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.
சரவணனின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸிக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவரை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பொன்னேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
Also Read: தெலங்கானா: 18 முறை போன்; ரூ.45 லட்சம்; 9 வயது சிறுவன் கொலை!- ஸ்கைப் காலில் சிக்கிய மெக்கானிக்
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கொலை குறித்து விசாரித்தனர். பின்னர் சரவணனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணனைக் கொலை செய்த கார் சென்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சரவணன் கொலை குறித்து விசாரணை நடந்துவருகிறோம். அவரின் கொலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ரியல் எஸ்டேட் தொழிலில் சரவணன் ஈடுபட்டு வந்ததால் தொழில் போட்டி காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும், சரவணனின் செல்போனுக்கு வந்த போன் அழைப்புகளை ஆய்வு செய்துவருகிறோம்" என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/tiruvallur-real-estate-businessman-killed-by-8-member-gang
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக