Ad

வெள்ளி, 23 அக்டோபர், 2020

தெலங்கானா: 18 முறை போன்; ரூ.45 லட்சம்; 9 வயது சிறுவன் கொலை!- ஸ்கைப் காலில் சிக்கிய மெக்கானிக்

தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் நகரைச் சேர்ந்தவர் ரஞ்சித் ரெட்டி. லோக்கல் டிவி சேனல் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் தீக்‌ஷித் ரெட்டி. வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த தீக்‌ஷித், கடந்த 18-ம் தேதி மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், பதறிய ரஞ்சித் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

க்ரைம் -

விசாரணையில் சிறுவன் தீக்‌ஷித்தைக் கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் மண்டா சாகர் என்பது தெரியவந்தது. தீக்‌ஷித்துக்கு மண்டா சாகரைத் தெரியும் என்பதால், தனது பைக்கில் சிறுவனை ஏற்றிக்கொண்டு ஊருக்கு வெளியில் சென்றிருக்கிறார். ஆனால், சிறுவனைக் கட்டுப்படுத்த முடியாத சூழலில், கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, தான் அகப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தில் அருகிலிருந்த கிராம மலைப்பகுதியில் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார். இருப்பினும், சிறுவனின் தாய்க்கு போன் செய்த மண்டா சாகர், ரூ.45 லட்சம் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார். 18-ம் தேதியே சிறுவனைக் கொன்றுவிட்ட மண்டா சாகர், 21-ம் தேதி வரை சிறுவனின் பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டி வந்திருக்கிறார்.

Also Read: வேளாங்கண்ணி: 15 வயது சிறுமி கடத்தல்; பாலியல் வன்கொடுமை! 17 வயது சிறுவன் போக்சோவில் கைது

இதுகுறித்து பேசிய மகபூபாபாத் போலீஸ் எஸ்.பி கோட்டி ரெட்டி, ``அதே பகுதியில் வசித்து வந்ததால், சிறுவன் தீக்‌ஷித்தின் குடும்பத்தினரை மண்டா சாகருக்கு நன்கு தெரியும். குறுக்கு வழியில் பணத்தை சம்பாதித்து ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் 4-ம் வகுப்புப் படித்து வந்த தீக்‌ஷித்தைக் கடத்தி, அவனது பெற்றோரிடம் பணம் பறிக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

சிறுவன் தீக்‌ஷித்

அதன்படி, வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தீக்‌ஷித்தைக் கடந்த 18-ம் தேதி, தனது பைக்கில் ஏற்றி ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றிருக்கிறார். தீக்‌ஷித்துக்கு மயக்க மருந்து கொடுத்து மயக்கத்தில் சிறிதுநேரம் வைத்திருக்கிறார். அதன் பின்னர், மயக்கம் தெளிந்த சிறுவன் தீக்‌ஷித்துக்குத் தன்னைத் தெரியும் என்பதால், கடத்தல் தொடர்பாக தான் சிக்கிக்கொள்வோமோ என்ற பயம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. மேலும், தீக்‌ஷித்தை நீண்டநேரம் மண்டாவால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனால், கடத்திய 2 மணி நேரத்தில் சிறுவன் தீக்‌ஷித்தைக் கழுத்தை நெறித்து மண்டா கொலை செய்திருக்கிறார். பின்னர், அருகிலிக்கும் கேசமுத்திரம் கிராம மலைப்பகுதிக்கு உடலைக் கொண்டுசென்று பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார். அதன்பின்னர் வீட்டுக்கு வந்த மண்டா, இரவு 9.45 மணியளவில் தீக்‌ஷித்தின் தாய்க்கு பணம் கேட்டு போனில் மிரட்டல் விடுத்திருக்கிறார். இன்டர்நெட் மூலம் அவர் போன் செய்ததால், தொடக்கத்தில் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

Also Read: தத்தெடுப்பு.. ரூ.1.3 கோடி இன்ஷூரன்ஸ் பணம்? - சிறுவன் கொலை வழக்கில் இருந்து தப்பித்த லண்டன் தம்பதி

போலீஸுக்குச் சென்றால் தீக்‌ஷித்தைக் கொன்றுவிடுவதாக மிரட்டிய மண்டா, சிறுவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு மருந்து கொடுத்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக சிறுவனின் தாய்க்கு 18 முறை அவர் போன் செய்திருக்கிறார்.

சிறுவன் கொலையில் சிக்கிய மண்டா சாகர்

ரூ.45 லட்சத்தைப் பணமாகவும் நகைகளாகவும் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார். பணம், நகையைத் தயார் செய்யும்படி கூறிய அவர், அவற்றை உறுதி செய்ய ஸ்கைப் வீடியோ காலில் பேசுவதாகக் கடந்த 20-ம் தேதி இரவு கூறியிருக்கிறார். குறிப்பிட்ட இடத்துக்கு பணம், நகைகளோடு 21-ம் தேதி காலை 11 மணியளவில் வரும்படி கூறியநிலையில், பணத்தோடு ரஞ்சித் அங்கு சென்றபோது அதை வாங்க யாரும் வரவில்லை. இந்தசூழலில் சிறுவனின் எரிக்கப்பட்ட உடல் குறித்து நேற்று (22-ம் தேதி) மதியம் தகவல் தெரியவந்தது.

சிறுவன் கடத்தல் - சிசிடிவி காட்சி

18 முறை போன் செய்தபோது சிக்காத மண்டா, ஸ்கைப் வீடியோ காலில் சிக்கினார். ஸ்கைப் ஐ.டி-யை வைத்து அவரது செல்போன் நம்பரை டிரேஸ் செய்தோம். அந்த எண்ணை வைத்து சிறுவனைக் கடத்தியது மண்டா என்பதைக் கண்டுபிடித்தோம். அவரைக் கைது செய்து விசாரித்து வருகிறோம்’’ என்றார். சிறுவனை மண்டா சாகர் தனியாகவே கடத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/telangana-police-arrest-23-year-old-mechanic-for-9-year-old-childs-kidnap-murder

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக