மருத்துவப் படிப்பில் ஓபிசி 50% இட ஒதுக்கீடு இந்தாண்டு இல்லை!
`மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழகம் வழங்கும் இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க உத்தரவிட முடியாது’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
மருத்துவப் படிப்பில் 15%, முதுநிலை மருத்துவப் படிப்பில் 50% இடங்களை இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழகம் வழங்கி வருகிறது. அதில், 50 சதவிகிதத்தை ஓபிசி பிரிவினருக்கு ஒதுக்க தமிழக அரசு கோரியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
ஓபிசி இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்திய நிலையில், அது சாத்தியமில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இடங்களை இந்த ஆண்டே ஒதுக்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
source https://www.vikatan.com/news/general-news/26-10-2020-just-in-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக