மேலும் சிலதளர்வுகள்?!
தமிழத்தில் தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வராத நிலையிலும் மக்களின் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வரும் 28-ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். தொடர்ச்சியாக, பண்டிகை காலம் என்பதால், இந்த கூட்டத்தில், நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஏற்கனவே பண்டிகை காலம் என்பதால், தமிழகத்தில் கடைகள் இரவு 10 மணி வரை செயல்பட முதல்வர் அனுமதி வழங்கியது குறிப்பிடதக்கது.
source https://www.vikatan.com/news/general-news/24-10-2020-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக