Ad

சனி, 24 அக்டோபர், 2020

சரஸ்வதி பூஜை தினத்தில் அறியவேண்டிய 13 அபூர்வ தகவல்கள்!

சரஸ்வதி பூஜை நன்னாளில் புராணங்கள் போற்றும் கலைமகளின் மகிமைகளை அறிந்து வழிபட்டால், பலன்கள் பன்மடங்காகக் கிடைக்கும். முதலில் கலைமகள் திருத்தலங்களை தரிசிப்போம்.

‘சரஸ்’ என்றால் ‘பொய்கை’ என்று பொருள். மனமாகிய பொய்கையில் வாழ்பவள் ஆதலால், சரஸ்வதி என்று அழைக்கப் படுகிறாள்.

கலைமகளின் திருக்கரத்தில் திகழும் மணிமாலையை அட்ச மாலை எனப் போற்றுவர். தான் மொழி வடிவானவள் என்பதை உணர்த்த, அட்ச மாலையுடன் திகழ்கிறாளாம் சரஸ்வதி.

சரஸ்வதியின் வாகனம் அன்னப் பறவை. இது, கல்வியாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் இருக்கவேண்டிய நற்பண்புகளை உணர்த்துகிறது. தண்ணீரை நீக்கி பாலை மட்டும் பிரித்துப் பருகும் அன்னப் பறவை போல், கல்வியாளர்கள் விவேகத்துடன் தீயவற்றை நீக்கி, நல்லவற்றை ஏற்க வேண்டுமாம்.

சரஸ்வதியின் கொடி

பண்டைய காலத்தில் அரசர்களும் புலவர்களும் மொழிவிவாதம் செய்யும்போது, அவர்கள் அமர்ந்திருக்கும் ஆசனத்தில் கொடியும் இணைக்கப்பட்டிருக்குமாம். இதை சாரதா த்வஜம் என்பர். இதில் சரஸ்வதிதேவியின் திருவுருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.

சில நூல்கள், கலைவாணியின் வாகனமாக மயிலைக் குறிப்பிடுகின்றன. ராஜஸ்தானில் சில தலங்களிலும், மும்பையிலும் மயில் மீது வீற்றிருக்கும் சரஸ்வதியை தரிசிக்கலாம். தவிர, ஆட்டின் மீது அமர்ந்திருக்கும் சரஸ்வதியின் திருவடிவங்களும் உண்டு.

சரஸ்வதி

பாரதி என்ற பெயர் ஏன் தெரியுமா?

வேதங்கள் சரஸ்வதிதேவியை துதிகளின் வடிவாக `இடா’ என்றும், அறிவின் விளக்கமாக `பாரதி’ என்ற பெயரிலும், ஞான வடிவில் திகழும் அவளை `சரஸ்வதி’ என்றும் போற்றுகின்றன. இடாதேவியா அவள் நம் வீடுகளில் வீற்றிருந்து மகிழ்ச்சியையும் இன்பத்தையும் அளிக்கிறாள். பாரதி தேவி என்ற பெயரில் மக்களுக்கு கல்வி-கலை ஞானத்தை அருள்கிறாள். சரஸ்வதிதேவி வேள்விகளைக் காப்பதுடன் சகல செல்வத்தையும் நம்முடைய கல்வியின் மூலம் கிடைக்க அருள் செய்கிறாள் என்கின்றன ஞான நூல்கள்.

சில கோயில்களில் கலைவாணி கரத்தில் பூரணக் கலசத்துடன் திகழ்வாள். அவள் நதியின் வடிவிலும் அருள்பாலிப்பவள் ஆதலால், கரத்தில் பூரணக் கலசத்துடன் அவள் அருள்வதாக ஐதிகம்.

கலைவாணியை வாக்தேவியாகவும் போற்றுகின்றன புராணங்கள். வாக்தேவியானவள் மூன்று சந்தியா காலங்களில் காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதி என மூன்று வடிவங்களில் திகழ்கிறாளாம். இந்த மூன்று திருவடிவுடன் திருவீழிமிழலை தலத்தில் அவள் ஈசனை வழிபட்டதாக, அவ்வூர் தலபுராணம் சொல்கிறது. இங்குள்ள மூன்று லிங்கங்களை முறையே காயத்ரீஸ்வரர், சாவித்திரீஸ்வரர், சரஸ்வதீஸ்வரர் என்ற பெயரில் வழிபடுகின்றனர்.

Posted by Sakthi Vikatan on Saturday, October 24, 2020

கலைமகளின் வீணை

கலைவாணி ஏந்தியிருக்கும் வீணைக்கு கச்சபி என்று பெயர். அதை அருளியது சிவபெருமான் என்பர். தேவியின் கரங்களில் இருக்கும் வீணையும் சுவடியும் கல்வியின் மேன்மையையும் கலைகளில் திறமையையும் அருள்பவள் என்பதை உணர்த்துகின்றன.

தமிழகத்தில் கூத்தனூர் போன்று ஆந்திர மாநிலத்தில், பாசரா என்ற திருத்தலத்தில் தனிக் கோயிலில் அருள்கிறாள் சரஸ்வதி. விநாய கப் பெருமான் சரஸ்வதியை வழிபட்ட திருத்தலம் இது என்கிறார்கள்

Also Read: சரஸ்வதி பூஜை... வழிபட உகந்த நேரம் எது? வழிமுறைகள் என்னென்ன?

குமரி மாவட்டம், பத்மநாபபுரத்தில் தனிக் கோயிலில் அருள் புரியும் சரஸ்வதிதேவியை கவிச் சக்ரவர்த்தி கம்பர் வழிபட்டார் என்கிறது வரலாறு.

தஞ்சை மாவட்டம் திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறைக் கோட்டத்தில்... மேலிரு கரங்களில் அட்சமாலை சுவடியும், கீழிரு கரங்களில் அபய, ஊரு முத்திரைகளுமாக நான்கு திருக்கரங் களுடன் காட்சித் தருகிறாள் சரஸ்வதிதேவி.

திருப்பட்டூர் பிரம்மசம்பத் கெளரி அம்பிகைக்கு நடைபெற்ற நவராத்திரி வைபவக் காட்சிகள்

Posted by Sakthi Vikatan on Saturday, October 24, 2020

திருக்கண்டியூர் சிவாலயத்தில் பிரம்மாவுடன் அருளும் கலைவாணியைத் தரிசிக்கலாம்.

காஞ்சி கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் சரஸ்வதிக்குத் தனிச் சந்நிதி உண்டு. இவளை லலிதா திரிபுர சுந்தரியின் படைத் தலைவிகளில் ஒருவளான சியாமளா தேவி சொரூபமாக வணங்குகிறார்கள்.



source https://www.vikatan.com/spiritual/gods/learn-these-13-facts-about-goddess-saraswati-during-the-poojai-day

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக