Ad

சனி, 24 அக்டோபர், 2020

`ஜம்மு காஷ்மீர் கொடி ஏற்றப்பட்டால் தான், தேசியக் கொடியை மேலெழுப்புவோம்’ - மெகபூபா முப்தி உறுதி

மெஹபூபா முப்தி, “என் கொடி இது தான், (மேஜையின் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் கொடியைக் காட்டி), இது மீண்டும் கொண்டுவரப்படும்பொழுது இந்திய நாட்டின் மூவர்ணக் கோடி தானாக அதனுடன் மேல் எழுப்பப்படும். சுதந்திர, ஜனநாயக, மதச்சார்பற்ற இந்தியாவுடன் தான் எங்களுக்கு இணக்கமிருந்தது. இன்றைய இந்தியாவின் செயல்பாடுகளின் மீது எங்களளுக்கு உடன்பாடில்லை, நாங்கள் செளகரியமாகவும் இல்லை”, என்றார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 -ம் தேதி ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து உத்திரவிட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மத்திய அரசு, பல கட்டுப்பாடுகளை விதித்தது. அறிவிப்பை வெளியிடுவதற்கு முதல் நாள் இரவில், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, அவரின் மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா உட்பட அம்மாநிலத்தின் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு வீடுக்காவாலில் வைக்கப்பட்டனர்.

மெஹபூபா முப்தி

கடந்த மார்ச் மாதத்தில், மெகபூபா முப்தியைத் தவிர்த்து பெரும்பாலானோர் விடுதலை செய்யப்பட்டனர். மெகபூபா மட்டும் தொடர்ந்து வீட்டுகாவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இமாதம் 13-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்ட பின்னர் ஆடியோ பதிவின் மூலம் மக்களிடம் உரையாற்றிய மெகபூபா முப்தி, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்.

இந்நிலையில், விடுதலைக்குப் பின்னர் மெகபூபா முப்தி முதல் முறையாக ஊடகங்ளிடம் நேற்று (வெள்ளிக்கிழமை) பேட்டியளித்தார். ``என் கொடி இது தான் (மேஜையின் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜம்மு & காஷ்மீர் கொடியைக் காட்டி). இது மீண்டும் கொண்டுவரப்படும்போது, இந்திய நாட்டின் மூவர்ணக் கொடி தானாக அதனுடன் மேல் எழுப்பப்படும். எங்கள் கொடியை மீண்டும் கொண்டுவரும் வரை வேறு எந்த கொடியையும் ஏற்றப் போவதில்லை. இந்தக் கொடிதான் மூவர்ணக்கொடியுடனான உறவை வளர்த்தெடுத்தது

நான் போராட்டக் குணம் கொண்டள். எங்களுக்கான சிறப்பு அந்தஸ்து மீண்டும் கிடைக்கும் வரை எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். அரசியல் சட்டம் 370-ஐ மீட்பது மட்டுமல்ல எனது குறிக்கோள், காஷ்மீர் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் எனது போராட்டத்தின் நோக்கம்.

மெஹ்பூபா முப்தி

மேலும், சுதந்திர, ஜனநாயக, மதச்சார்பற்ற இந்தியாவுடன் தான் எங்களுக்கு இணக்கம் இருந்தது. இன்றைய இந்தியாவின் செயல்கள் மீது எங்களுக்கு உடன்பாடில்லை. மத்திய பா.ஜ.க. அரசு சிறப்பு அந்தஸ்த்தினை ரத்துசெய்து ஜனநாயகத்துக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். காஷ்மீரின் பிரச்னைகளைத் தீர்க்க பலர் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். இது ஜம்மு & காஷ்மீரின் அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் எவ்வித வேற்றுமைகளுமின்றி ஒன்றுகூடி நம் உரிமைகளை மீட்டெடுக்கும் நேரம்” என்று மத்திய அரசின் செயல்களை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

மெகபூபா முப்தியின் கருத்துக்களுக்கு எதிராக பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “காஷ்மீரின் அரசியல்வாதிகள், வெளிப்படையாக அடையாளம் காணப்படும் பிரிவினைவாதிகளை விட ஆபத்தானவர்கள்” என்று கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் பஞ்சாயத்துராஜ் சட்டம் 1989-யை நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/politics/wont-hoist-tricolour-until-jk-flag-is-allowed-mehbooba-mufti

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக