Ad

ஞாயிறு, 1 நவம்பர், 2020

`மதமாற்றத் திருமணங்களைக் கட்டுப்படுத்தத் தனிச் சட்டம்!’ - உ.பி அரசு திட்டம்

பிறப்பால் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்காக இந்து மதத்திற்கு மாறினார். திருமணமான மூன்று மாதங்களுக்கு பின்னர், உறவினர்களால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி போலீஸ் பாதுகாப்புக்காக உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இவ்வழக்கை எடுத்து விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி, `திருமண நோக்கத்துக்காக மட்டும் மதம் மாறுவது ஏற்கத்தக்கதல்ல’ என்று உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தார்.

திருமணம்

இந்நிலையில், இவ்வழக்கினை மேற்கோள்காட்டி பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ``இந்தியாவின் பல மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருவது, தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தங்களின் சுய அடையாளங்களை மறைத்துக்கொண்டு அப்பாவிப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு, பெண்களின் வாழ்க்கையை அழிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். இதுபோன்ற மதமாற்றங்கள் ஏற்புடையதல்ல என்று நீதிமன்றமே கூறியிருக்கிறது. சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காகவும், லவ் ஜிஹாத்துக்கு எதிராகவும் விரைவில் தனிச் சட்டம் அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

Also Read: ஹத்ராஸ் சம்பவம்: `அவப்பெயர்... சகோதரியாகச் சொல்கிறேன்!' - யோகி ஆதித்யநாத்துக்கு உமா பாரதி அட்வைஸ்

`லவ் ஜிஹாத்’ என்பது இந்து மதத்தில் கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் இஸ்லாமியர்களைக் குறிக்க வலதுசாரிகளால் பயன்படுத்தப்படும் சொல். திருமணம் என்பது திருமணத்திற்கான வயது வரம்பை எட்டிய ஆண் பெண் இருவரின் முடிவைச் சார்ந்தது என சமூக ஆர்வலர்களால் பல்வேறு விதமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

யோகி ஆதித்யநாத்தின் முன்வைத்த கருத்திற்கு சமாஜ்வாதி கட்சியின் செய்தித்தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர சவுத்திரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/news/politics/up-government-planning-law-to-regulate-interfaith-marriage

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக