Ad

ஞாயிறு, 1 நவம்பர், 2020

ஆந்திரா அதிர்ச்சி: காதலை ஏற்காத 17 வயது சிறுமி! - நடுரோட்டில் கழுத்தை அறுத்த இளைஞர்

ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் வசித்து வரும் அனில் என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

அந்தச் சிறுமி கஜுவாக்கா பகுதியில் உள்ள சாய்பாபா கோவில் அருகே கூட்ட நெரிசலான சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சிறுமியை வழிமறித்த அனில், தன் காதலை தெரியப்படுத்தியுள்ளார். அனிலின் காதலை அவர் ஏற்க மறுத்துள்ளார். இதையடுத்து அனில், அந்தச் சிறுமியிடம் தன் காதலை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கொலை.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாக மாறியுள்ளது, இதனால், கடும் ஆத்திரம் அடைந்த அனில், தான் மறைத்து வைத்திருந்த கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தால் சிறுமி கழுத்துப் பகுதியை அறுத்துள்ளார். தொண்டையில் வெட்டுப்பட்ட வரலட்சுமி, சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடந்த இந்த சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் மக்கள் குவிந்தனர். அவர்கள், சிறுமியைக் காப்பாற்ற முயற்சித்தனர்.

ஆனால், அதிகப்படியான ரத்தம் வெளியேறிய நிலையில், சம்பவ இடத்திலேயே அந்தச் சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து, அனிலைக் கைது செய்த போலீஸார் அவர் மீது கொலை வழக்கு பதிந்துள்ளனர். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அந்தச் சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவித்திருக்கிறார்.

Also Read: சென்னை: அண்ணனுக்கு பதில் தம்பி? - திருமண நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர் கொலை



source https://www.vikatan.com/news/crime/girl-killed-in-crowded-street-in-vishakapattinam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக