சென்னை, கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (38). ஆட்டோ டிரைவர். இவரின் மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஒரு வயதில் மகன் இருக்கிறார். திருப்பதியும் அதே பகுதியைச் சேர்ந்த விமலும் நெருங்கிய நண்பர்கள். விமல், கொத்தனாராக வேலை பார்த்துவருகிறார். விமலுக்குத் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள். திருப்பதி வீட்டுக்கு அடிக்கடி விமல் செல்வார். அதனால் விஜயலட்சுமியுடன் விமல் பழகியிருக்கிறார். இந்தத் தகவல் தெரிந்ததும் விமலையும் மனைவி விஜயலட்சுமியையும் திருப்பதி கண்டித்திருக்கிறார். ஆனால், இருவரும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன்னர் திருப்பதிக்கும் விஜயலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதனால் விஜயலட்சுமி, தன்னுடைய தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். தன்னுடைய மனைவி திருவண்ணாமலையிலிருக்கும் தாய் வீட்டில் இருப்பதாக திருப்பதி கருதினார். ஆனால், விஜயலட்சுமி, செங்குன்றம், பாடியநல்லூர் வடிவேல் நகரில் குழந்தையுடன் தங்கியிருந்திருக்கிறார். அப்போது விமல், அங்கு அடிக்கடி சென்றுவந்திருக்கிறார்.
இந்தத் தகவல் தெரிந்ததும் ஆத்திரமடைந்த திருப்பதியும் அவரின் சகோதரர் சஞ்சீவும் சேர்ந்து செங்குன்றத்துக்குச் சென்றனர். வீட்டில் விமலும் விஜயலட்சுமியும் இருந்ததைப் பார்த்த திருப்பதியும் சஞ்சீவும் உருட்டுக்கட்டையால் விமலைச் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள். பின்னர் விஜயலட்சுமியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு திருப்பதி கொளத்தூருக்கு வந்திருக்கிறார்.
Also Read: `அரக்கோணம் எஸ்.ஐ-யின் தவறான நட்பு!’ - அதிரடி நடவடிக்கை எடுத்த வேலூர் டி.ஐ.ஜி
படுகாயமடைந்த விமலை அக்கம் பக்ககத்தில் உள்ளவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். இது குறித்து செங்குன்றம் போலீஸார் வழக்கு பதிந்து, திருப்பதியைக் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர். அவரின் சகோதரர் சஞ்சீவை போலீஸார் தேடிவருகின்றனர்.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-auto-driver-in-attack-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக