ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு இந்த விழாவை கொண்டாட காவல்துறை அனுமதி தரவில்லை.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே இவ்விழாவை கொண்டாடவிருந்த தமிழர் தேசிய முன்னணிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்தநிலையில் தமுக்கம் பகுதியில் அமைந்துள்ள தமிழன்னை சிலைக்கு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து தமிழன்னை சிலை முன்பாக, `நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும். மத்தியப் பணியிடங்களுக்கான நுழைவுத் தேர்வை தமிழில் நடத்த வேண்டும். 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்.
தமிழ்நாடு என பெயர்சூட்டல் காரணமான தியாகி சங்கரலிங்கனாருக்கு சட்டமன்ற வளாகத்தில் சிலை அமைக்க வேண்டும்’’ என்பது போன்ற கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினார்கள்.
Also Read: தமிழகத்தில் 100 அக்ரி ஸ்டோர்கள் திறப்பா... என்ன சொல்கிறது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்?
தமிழக உரிமைகளை பறிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டுக்கான தனிக்கொடியுடன், மத்திய அரசுக்கு எதிராக கண்டனப் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
நூற்றுக்கும் அதிகமான பெரியாரிய உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கைது செய்யும்போது காவலர்களுக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனால் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இதனால் தமுக்கம் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
source https://www.vikatan.com/news/protest/madurai-police-arrest-periyarists-over-protest-without-permission
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக