சென்னை அசோக்நகர் 29 -வது தெருவைச் சேர்ந்தவர் குமார் (50). இவரின் அம்மா கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் கடந்த 11.1.2022-ம் தேதி மாலை 4 மணியளவில் குமார், தன்னுடைய வீட்டில் அம்மாவின் போட்டோவை வைத்து உறவினர்களுடன் சேர்ந்து சாமி கும்பிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் குமாரின் மனைவி அன்னலட்சுமி கலந்து கொள்ளவில்லை. மேலும் அன்னலட்சுமி அதே பகுதியில் உள்ள அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
Also Read: மனைவி கர்ப்பத்தில் சந்தேகம்; மது போதையில் தகராறு- தாக்கிய கணவனைக் கொலை செய்த மனைவி!
அதனால் ஆத்திரமடைந்த குமார் மாமியார் வீட்டுக்குச் சென்றார். அங்கு அன்னலட்சுமியின் அண்ணன் முனுசாமியிடம் குமார் தகராறில் ஈடுபட்டார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த முனுசாமி, குமாரை தாக்கி கீழே தள்ளியுள்ளார். கீழே விழுந்த குமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டு அவர் மயங்கினார். உடனடியாக குமாரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். இதுகுறித்து குமாரின் சகோதரி விலாசவதி அசோக்நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் முனுசாமியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், காயமடைந்த குமார், சிகிச்சை பலனின்றி 13.1.2022-ம் தேதி இறந்தார். அதனால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/police-arrested-a-man-who-killed-his-sisters-husband
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக