ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பலமுகங்கள் கொண்ட பேராசிரியை பர்வீன் சுல்தானா, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரான திரு.தொல். திருமாவளவனை சந்தித்து அண்மையில் உரையாடினார்.
நீண்ட அந்த உரையாடலில் இருந்து சில துளிகள்.
உங்களின் எழுச்சிமிக்க பேச்சிற்கு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆரவாரம் உண்டு. ஆனால் உங்களின் மீது வைக்கப்படும் முக்கிய விமர்சனம் நாடகக் காதல். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன ?
இவை அனைத்துமே மருத்துவர் ராமதாஸால் கட்டமைக்கப்பட்ட ஒன்று. இவை எதுவும் உண்மை இல்லை என்பது இன்று வெளிப்படட்டு வருகிறது. முஸ்லீம்களுக்கு எதிராக ‘லவ் ஜிஹாத்தை’ போல தான் இந்த நாடகக்காதல். அங்கே முஸ்லீம் வெறுப்பை முன்வைக்கிறார்கள் இங்கே தலித் வெறுப்பை முன்வைக்கிறார்கள். கிறிஸ்தவர் மற்றும் முஸ்லீம் அல்லாதவர்களை பாஜக ஒன்றிணைக்க நினைப்பது போல தலித் அல்லாதவர்களை ஒன்றிணைக்க எண்ணுகிறது பாமக.
Also Read: "`ஜெய் பீம்' வக்கீல் சந்துருவாக நடிக்க முதல் சாய்ஸ் யார் தெரியுமா?"- சூர்யா சொன்ன ரகசியம்
அதனால் எங்கள்மீது திணிக்கப்பட்ட குற்றச்சாட்டு ஓர் அப்பட்டமான, அபாண்டமான, அருவருப்பான அவதூறு. சமூகத்தில் காதல் என்பது ஒரு இயல்பான இயங்கியல் போக்கு. அதற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும். கட்சி எப்படி பொறுப்பேற்க முடியும்.
ஜெய் பீம் திரைப்பட சர்ச்சை பற்றிய உங்கள் கருத்து ?
அத்திரைப்படம் பேசும் கருத்து அதில் இடம்பெற்ற காலண்டர் ஆகியவற்றைத் தாண்டி ஜெய்பீம் என்ற பெயர் தான் இவர்களின் பிரச்சனை என்று நான் நினைக்கிறன். இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் உள்ள தலித்துகளின் அடையாள முழக்கமாய், விடுதலை முழக்கமாய் சமூகநீதி முழக்கமாய் விளங்குகிறது ஜெய் பீம் என்னும் வாசகம். வடஇந்தியாவில் தொலைபேசியில் சாதாரணமாக பேசும்போது ஜெய் பீம் என்று சொல்லி பேச தொடங்குவதை பார்க்கலாம்.
பீமாராவ் என்ற அம்பேத்கரின் உண்மையான பெயரை குறிப்பிட்டு அவரை வணங்கவே அவரை பின்தொடர்பவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் தற்போதைய சூழலில் நீங்கள் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்கிறீர்கள், அதற்கு நாங்கள் ஜெய் பீம் என்று சொல்கிறோம் என்று வகையில் கூட இதை நீங்கள் பார்க்கலாம். ஆனால் இவ்வாசகத்திற்கான உண்மையான வரலாறு என்பது முற்றிலும் வேறானது. அது அம்பேத்கர் காலத்திலேயே முழங்கப்பட்ட ஒன்று. பீம் என்பது மஹாராஷ்டிர மாநிலத்தில் ஓடக்கூடிய பீமா நதியை குறிக்கும். அந்த நதிக்கரையில் ஓரத்தில் இருக்கக்கூடிய வெற்றி சின்னத்தை வழிபட முழங்கபட்ட வாசகம் ஜெய்பீம்.
மேலும் ஜெய் பீம் என்ற முழக்கமும் அம்பேத்காரின் கருத்தியலும் பட்டியல் சமூக மக்களிடையே சென்று சேர்ந்த அளவிற்கு பழங்குடி மக்களிடையே சேரவில்லை. ஏனென்றால் பழங்குடி இனங்களில் தீண்டப்படாத இனங்களும் உண்டு. நான் ஜெய் பீம் பார்க்க தொடங்கியபோது இப்படம் பட்டியல் சமூகத்தை பற்றியதாக இருக்கும் என்றே எண்ணினேன். ஆனால் இத்திரைப்படம் பழங்குடியினரை பற்றிப் பேசியது. மேலும் உண்மையில் பாதிக்கப்பட்ட ராசாக்கண்ணு குறவர் சமூகத்தை சேர்ந்தவர். ஆனால் இப்படத்தில் இருளர் இனத்தை பற்றி காட்டியிருப்பார்கள். ஏனென்றால் திரைப்படம் என்பது ஒரு புனைவு. நேரடியாக எதையும் குறிப்பிடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள்.
இக்கதை நிகழ்ந்த காலக்கட்டத்தில் தான் பாமகவின் எழுச்சி நிகழ்கிறது. ஒரு பக்கம் கட்சி கொடியையும் மறுபக்கம் சாதி சங்கக் கொடியையும் ஒரு சேர முன்னிறுத்துகிறார்கள். எனவே திரைப்படங்களில் காலத்தை குறிக்க பெரியார் போக்குவரத்து கழகத்தின் பேருந்தினைக் காட்டுவது போலவே இந்த காலண்டரும். ஆனால் இவை அனைத்தும் ஒரு சமூகத்தை புண்படுத்துவதாக இவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
முழு வீடியோ ஆனந்த விகடன் யூடியூப் சேனலில்..!
source https://www.vikatan.com/oddities/miscellaneous/parvin-sultanas-kathaipoma-show-with-thirumavalavan-part-4
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக