Ad

வெள்ளி, 24 டிசம்பர், 2021

Rewind 2021: அசத்திய Australia, தடுமாறிய India, புறக்கணிக்கப்படும் Pakistan

காலம் மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறதல்லவா. உருமாறிய கொரோனா, பலகட்ட ஊரடங்கு என இதோ 2021-ம் ஆண்டின் இறுதியை நெருங்கி விட்டோம் நாம். எத்தனை கஷ்டங்கள், இடர்பாடுகள் என எண்ணிலடங்கா துயரங்களையும் காலம் நமக்களித்தாலும் இவை அனைத்திலிருந்தும் மீண்டு போராடுவது தானே மனித இனத்தின் இலக்கணம்.

அதற்கான மிக பெரிய பங்கை சத்தமேயில்லாமல் ஆற்றியிருக்கிறது விளையாட்டு. காண்பவர்களுக்கு பொழுதுபோக்கு, பங்கேற்பவர்களுக்கு அதன் மேல் உள்ள காதல் என்பதோடு மட்டும் நாம் ஒரு விளையாட்டினை சுறுக்கிவிட முடியாது. தன் புறச்சூழல் அனைத்தையும் மறந்து ஒரு தனி மனிதன் தனக்காக தன் அணிக்காக சிந்தும் ஒவ்வொரு துளு வேர்வையும் மனித இனத்திற்கான மாபெரும் நம்பிக்கையே.

காலங்காலமாக விதைக்கப்பட்டு வரும் நம்பிக்கையை இந்தாண்டும் விதைக்க தவறவில்லை விளையாட்டு. அப்படி இந்தாண்டு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தையும் இனி வரும் நாட்களில் ஒவ்வொன்றாக காண்போம்.

முதல் அத்தியாயமாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் சிறிய ரீவைண்ட் இதோ

கடைசியாக 2016-ம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை சுமார் ஐந்தாண்டுகளுக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தாண்டு நடந்து முடிந்துள்ளது. அதை சுமார் 14 ஆண்டுகால முயற்சிக்கு பிறகு முதன்முறையாக வென்றுள்ளது ஆஸ்திரேலியா. இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் என தொடருக்கு முன்பாக எந்த ஒரு நிபுணரின் வெற்றி பட்டியலிலும் ஆஸ்திரேலியாவுக்கு இடமில்லை. ஆனால் தாங்கள் யார் என்பதை உலகிற்கு மற்றுமொரு முறை அழுத்தமாக பதிவு செய்துள்ளது அந்த அணி. மிக சில ஆட்டங்களில் ரன் அடிக்காமல் போல தான் தொட்டு வளர்த்த சன்ரைசர்ஸ் அணியே தன்னை ஓரங்கட்டி அவமானப்படுத்தியிருந்த டேவிட் வார்னர் தன் மொத்த வெறியையும் ஒட்டுமொத்தமாக கொட்டி தீர்த்த மேஜிக்கும் நடந்தேறியது.

ஐ.சி.சி தொடர்களில் நியூசிலாந்திற்கு எதிராக ஒருமுறையல்ல இரண்டுமுறை இந்த ஒரே வருடத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது இந்திய அணி. அதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் வெற்றியாளராகும் மகத்தான வாய்ப்பையும் சேர்ந்து இழந்தது. இதுமட்டுமல்லாமல் ஆண்கள் அணிக்கு பயிற்சியாளரான சாரா டெய்லர், சிறிய அணிகளுக்கு எதிராக தங்களின் பி டீம்களை அனுப்பும் பெரிய அணிகள், சர்வதேச அரங்கில் தொடர்ந்து புறக்கணிக்கபடும் பாகிஸ்தான், டி20 ஃபார்மர்டை புதிய விதத்தில் அணுகும் அணிகள் என இவை அனைத்தும் பற்றியும் அறிய முழு வீடியோவை காணுங்கள்.



source https://sports.vikatan.com/cricket/rewind-of-the-happenings-in-international-cricket-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக