Ad

வெள்ளி, 31 டிசம்பர், 2021

ஆங்கிலப் புத்தாண்டும், அதன் மாதங்களும் உருவான கதை! ஒன்று, இன்று, நன்று - டெய்லி சீரிஸ் - 1

ஹேப்பி நியூ இயர்... வெல்கம் டு 2022!

தமிழ்ப் புத்தாண்டு சித்திரை மாதமா, தை மாதமாங்கிறதுல இங்கே ரெண்டு வேறு கருத்து இருக்கு. கொஞ்சம் பேர் திருவள்ளுவர் பிறந்த தினத்தை அடிப்படையா வச்சு திருவள்ளுவராண்டுன்னு காலத்தைக் கணக்கிடுறாங்க.

நமக்கு கொஞ்சம் அந்நியமா இருந்தாலும் உலகம் ஆங்கிலப்புத்தாண்டை அடிப்படையா கொண்டுதான் இயங்குது. ஆங்கிலப் புத்தாண்டின் வரலாறு பல நாடுகளின் வரலாற்றோட பின்னிப் பிணைஞ்சிருக்கு.

கடந்த 500 வருடங்களாத்தான் ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டா கொண்டாடிக்கிட்டிருக்கோம். அதுக்கு முன்னாடி ஆண்டின் முதல் நாள்ங்கிறது வேற வேற மாதிரி இருந்துச்சு.

ஆரம்பத்துல முறைப்படியான ஒரு காலண்டரை உருவாக்கி பயன்படுத்தினது மெசபடோமிய மக்கள்தான். ஆனா, அவங்க காலண்டர்ல ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் இல்ல. ஆண்டுக்கு பத்து மாதங்கள்தான் இருந்துச்சு. மார்ச் 25ம் தேதியிலதான் வருஷமே தொடங்குச்சு.

ரோமன் காலண்டர்

ரோமானியர்களுக்கு இந்தக் காலண்டர் தப்புன்னு தோணுச்சு. மார்ச் 25ங்கிறது சூரியனோட நகர்வுக்கு முரணா இருக்கிறதை கண்டுபிடிச்சு, மார்ச் 1ம் தேதியை புத்தாண்டுன்னு அவங்க கொண்டாட ஆரம்பிச்சாங்க. ரொம்ப நாள் இது வழக்கத்துல இருந்துச்சு.

நூமா பாம்பிளியஸ்ங்கிற ரோமானிய மன்னர் இந்தக் காலண்டரை மாத்தினார். அவர் ஜனவரி, பிப்ரவரின்னு ரெண்டு மாதங்களை உருவாக்கி கடைசி ரெண்டு மாதங்களா காலண்டர்ல இணைச்சார்.

ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசர் இந்தக் காலண்டர் நடைமுறையை மொத்தமா மாத்தி நிறைய சீர்திருத்தங்கள் செஞ்சார். இயேசு பிறக்கிறதுக்கு 46 ஆண்டுகளுக்கு முன்னாடி அவர் உருவாக்கிய காலண்டருக்கு ஜூலியன் காலண்டர்னு பேரு. அவர் ஜனவரி மாசத்தை ஆண்டின் முதல் இடத்துக்குக் கொண்டுவந்தார். ஜனவரி 1ம் தேதியே ஆண்டின் முதல்நாள்னு அறிவிச்சார்.

இந்த ஜூலியன் காலண்டரை பெரும்பாலான நாடுகள் ஏத்துக்கிட்டாங்க. ஆனா பிரிட்டன் மட்டும் ஏத்துக்கலே. இயேசு பிறந்த டிசம்பர் 25ம் தேதிதான் உண்மையான புத்தாண்டு. அதைத்தான் உலகம் கொண்டாடனும்னு அவங்க அறிவிச்சாங்க.

இப்படிப் பல பிரச்னைகள் நடக்க, அந்த காலண்டர்லயே பிரச்னை இருக்குன்னு போப் 13ம் கிரிகோரி கண்டுபிடிச்சார். மெசபடோமியர்கள், ரோமானியர்கள் எல்லாருமே சூரியனை பூமி சுற்றி வர்ற காலத்தைக் கணக்கிட்டே ஆண்டை வடிவமைச்சாங்க. ஒருமுறை பூமி சூரியனைச் சுற்றிவர முன்னூற்றி அறுபத்தஞ்சே கால் நாள் ஆகும். பாம்பிளியஸ், சீசர் ரெண்டு பேருமே இந்த கால் நாளை கணக்குலயே எடுத்துக்கலே. இதனால், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாள் தனியா நின்னுச்சு. போப் கிரிகோரி, அந்த ஒரு நாளை நாலாவது வருஷ பிப்ரவரி மாதத்துல சேர்த்து, அதுக்கு லீப் ஆண்டுன்னு பேரு கொடுத்தார். நாலு ஆண்டுக்கு ஒருமுறை வர்ற பிப்ரவரி மாதத்துக்கு மட்டும் 29 நாள் வரும்.

முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட காலண்டர் வடிவங்களுள் ஒன்று

இந்த அறிவியல்பூர்வமான சீர்திருத்தத்தை உலகம் முழுவதுமே ஏத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் எல்லா நாடுகள்லயுமே ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டா ஏத்துக்கிற நடைமுறை தொடங்கிடுச்சு.

ஆங்கிலப் புத்தாண்டு எப்படி வந்துச்சுன்னு தெரிஞ்சுக்கிட்டோம். இனி ஆங்கில மாதங்களோட பெயர்கள் எப்படி வந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாம்.

ரோமானியர்கள் எந்த ஒரு செயலையும் தொடங்குறதுக்கு முன்னால ஜானூஸ்-ங்கிற கடவுளை வணங்குவாங்க. ஆண்டோட தொடக்கத்துக்கும் ஜானூஸைக் குறிக்கிற மாதிரி ஜனவரின்னு பேரு வச்சுட்டாங்க. ஜானூஸ் கடவுளைப் பத்தி இன்னொரு செய்தியும் இருக்கு. கடந்த காலத்தையும் வரும் காலத்தையும் குறிக்கிற மாதிரி அவருக்கு ரெண்டு தலைகள் உண்டு.

ரோமானியர்கள் தங்கள் பகுதியை தூய்மைப்படுத்தி புதிதாக்குறதை ஒரு விழாவாவே கொண்டாடுவாங்க. அந்த விழாவுக்குப் பேரு Februa. அந்த விழா வர்ற ஆண்டோட ரெண்டாவது மாசத்துக்கு பிப்ரவரின்னு பேரு வச்சுட்டாங்க.

ரோமானியர்கள் விவசாயத்துக்கான கடவுளா வணங்கப்படுறவர் மார்ஸ். வேளாண்மைக்கான மாதமான மூன்றாம் மாதத்தை விவசாயக் கடவுளின் பெயரால மார்ச்னு அழைக்கத் தொடங்கினாங்க.

ஏப்ரிலிஸ் என்ற லத்தீன் வார்த்தைக்கு 'திறப்பு'ன்னு பொருள். மலர்கள் மலரும் காலம் இது. ஏப்ரிலிஸ் தான் ஏப்ரல்னு மாத்தப்பட்டிருக்கு. கிரேக்க - ரோமானிய பெண் கடவுளான மையாவோட நினைவாத்தான் மேங்கிற பெயர் சூட்டப்பட்டிருக்கு. மையா தான், குழந்தை வரம் கொடுக்கிற தெய்வம்.

கடவுள்களின் ராணியான ஜூனோவின் நினைவா ஜூன்ங்கிற பேரும் ஜூலியன் காலண்டரை உருவாக்கின ஜூலியஸ் சீசர் நினைவா ஜூலைங்கிற பேரும் வந்துச்சு. ரோமானிய சர்வாதிகாரியான அகஸ்டஸ் சீசருக்கு மரியாதை செலுத்தும் விதமா ஆகஸ்ட்ங்கிற பேர் வைக்கப்பட்டது.

ஜூலியஸ் சீசரின் உருவச் சிலை

ஆரம்பத்துல ஓராண்டுங்கிறது பத்து மாதங்கள் கொண்டதாத்தான் இருந்துச்சுன்னு பாத்தோம். ரோமானிய மொழியில ஏழைக் குறிக்கிற வார்த்தை செப்டம். எட்டைக் குறிக்கிற வார்த்தை நாவெம். பத்தைக் குறிக்கிற வார்த்தை டீசெம். எட்டாவது மாதம், ஒன்பதாம் மாதம், பத்தாம் மாதங்கிறதைக் குறிக்க அதுவே செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்ன்னு மாறிடுச்சு.

காலம் அதோட தடத்துல ஒடிக்கிட்டே இருக்கு. ஆண்டுகளும் அடுத்தடுத்து வந்து போய்க்கிட்டிருக்கு. நம் வாழ்க்கையில இந்தாண்டு என்ன செஞ்சிருக்கோம்ங்கிற அளவுகோல்தான் அடுத்தாண்டுக்கான உந்துதலாவும் உற்சாகமாவும் அமையும். இனிமேல் இதைச் செய்யமாட்டேன், இதைச் செய்வேன்னு வலிமையா ஒரு உறுதிமொழி எடுத்துக்கோங்க. உறுதியா அதைக் கடைபிடிங்க.

2022 நம்பிக்கையான, மகிழ்ச்சியான ஆண்டா அமையனும். ஒருத்தருக்கொருத்தர் நம்பிக்கையா இருப்போம். நோயை, பதற்றத்தை, நெருக்கடிகளை வெல்வோம்!

Happy New Year... Welcome to 2022!


source https://www.vikatan.com/lifestyle/nostalgia/how-the-english-new-year-and-calendar-came-into-existence-new-year-special-daily-series

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக