Ad

வியாழன், 30 டிசம்பர், 2021

`வாட்ஸ்அப் லைவ் லோகேஷன்; QR ஸ்கேன்!' - புதுச்சேரி போக்குவரத்து போலீஸின் புத்தாண்டு கைடு

புதுச்சேரி கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மக்கள் அதிகமாக வரக்கூடும் என்பதால் பொது மக்களின் வசதிக்காக வரும் 31.12.2021 மதியம் 2:00 மணி முதல் மறுநாள் (01.01.2022) காலை 3:00 மணிவரை கடற்கரை சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிக்குள் (White Town) வாகனங்கள் செல்ல அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி

மேலும் சிவாஜி சிலை சந்திப்பு, அஜந்தா சந்திப்பு, பட்டாணிக்கடை சந்திப்பு, C.V.ரோடு சந்திப்பு, முதலியார்பேட்டையிலுள்ள விநாயக முருகன் டீக்கடை சந்திப்பு, மரப்பாலம் சந்திப்பு, கோரிமேடு பார்டர், காலாப்பட்டு பார்டர். மதகடிப்பட்டு பார்டர், கன்னிகோயில் பார்டர் ஆகிய இடங்களில் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக ரூட் கைடு மேப் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கும். அதில் கொடுக்கப்பட்டுள்ள QR கோடை ஸ்கேன் செய்தால் அந்த லிங்க்கினுள் ரூட் கைடு மேப், எந்தெந்த பகுதிக்குள் வாகனங்கள் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது, எங்கு பார்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது, எந்த வழியாகச் சென்றால் கடற்கரைக்கு அருகில் செல்ல முடியும் என்பதெல்லாம் கொடுக்கப்பட்டிருக்கும்.

மேலும் அதில் இரண்டு எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஒன்று WHATSAPP எண் (9489205039) இருக்கும். அந்த எண்ணுக்கு உங்களது லைவ் லொகேஷனை அனுப்பினால், உங்களுக்கு ஒரு லிங்க் கிடைக்கும். அதைப் பயன்படுத்தி, நீங்கள் இருக்கும் இடத்துக்கு மிக அருகிலுள்ள வாகனம் நிறுத்தும் இடத்துக்கு எளிதாகச் செல்ல முடியும். அதேபோல் 112 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டால் தங்களுக்குத் தேவையான தகவல் கொடுக்கப்படும். இந்தச் சிறப்பு ஏற்பாட்டை பொதுமக்களும், சுற்றுலாப்பயணிகளும் பயன்படுத்திகொள்ளலாம்.

மேலும் அதிவேகமாகவும், மது அருந்திவிட்டும் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிந்து அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க புதுவை முழுவதும் பல இடங்களில் வாகன சோதனை செய்யப்படும். மேலும் ஒழுங்கீனமாக நடந்துகொள்பவர்களைக் கண்காணிக்க முக்கியச் சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.



source https://www.vikatan.com/news/general-news/puducherry-police-guide-for-new-year-celebrations

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக