Ad

வெள்ளி, 24 டிசம்பர், 2021

Doctor Vikatan: ஒரே நேரத்தில் ஒருவரை இரண்டு வைரஸ் தாக்குமா?

ஒரே நேரத்தில் இரண்டு வைரஸ் தொற்று ஒருவரை பாதிக்குமா? அதாவது டெல்டா வகை வைரஸும், ஒமிக்ரானும் ஒரே நேரத்தில் தொற்றுமா? அதே போல ஒரே நேரத்தில் ஒருவருக்கு இரண்டு வகையான தொற்றுகள் ஏற்படுமா? உதாரணத்துக்கு கோவிட் தொற்றும், டெங்கு தொற்றும்? இவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள என்ன வழி?

- அமித் (விகடன் இணையத்திலிருந்து)

டாக்டர் குமாரசாமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி.

``ஒரே நபருக்கு ஒரே நேரத்தில் இரண்டுவிதமான கோவிட் வைரஸ் தொற்று பாதிக்காது. உதாரணத்துக்கு டெல்டா வகை வைரஸுடன், புதிதாக உருமாறிப் பரவிக்கொண்டிருக்கும் ஒமிக்ரான் வகை வைரஸும் உடனே சேர்ந்து தொற்றாது. ஏதாவது ஒன்றுதான் தொற்றும். ஒரு நபருக்கு ஆறேழு மாதங்களுக்கு முன் கோவிட் தொற்று வந்திருக்கலாம். அப்போது அவரை பாதித்தது டெல்டா வகை வைரஸாக இருக்கலாம். அதே நபருக்கு இப்போது மீண்டும் தொற்று ஏற்படலாம். இரண்டாவது முறை ஏற்பட்டது ஒமிக்ரான் வகை வைரஸ் தொற்றாக இருக்கலாம்.

ஒரே நேரத்தில் கோவிட் தொற்றும் டெங்கு தொற்றும் ஒருவரைத் தாக்குமா என்று கேட்டிருக்கிறீர்கள். நிச்சயம் தாக்கும். ஒரே நேரத்தில் கோவிட் தொற்றும் பாசிட்டிவ், டெங்குவும் பாசிட்டிவ் என்று வரும் பல நோயாளிகளை இன்று மருத்துவர்கள் பார்க்கிறோம்.

Also Read: Doctor Vikatan: தடுப்பூசி போட்ட பிறகு எதிர்ப்பாற்றல் ஏற்பட்டுள்ளதா எனத் தெரிந்து கொள்ள முடியுமா?

இரண்டுக்குமான சில அறிகுறிகள் பொதுவாக இருக்கலாம். ஆனாலும் இரண்டும் வேறு வேறு பரிசோதனைகளின் மூலம் உறுதிசெய்யப்பட வேண்டியவை. இரண்டுக்குமான சிகிச்சைகளும் வேறு வேறு.

தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள என்ன வழி என்றால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமே தீர்வு. கோவிட் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளைக் கழுவுவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது, இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது ஆகியவை அவசியம்.

டெங்குவிலிருந்து தற்காத்துக்கொள்ள கொசுக்கள் இல்லாத சூழலில் வசிப்பது அடிப்படை. வீட்டைச் சுற்றி எங்கேயும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Dengue | Mosquito (Representational Image)

Also Read: Doctor Vikatan: தடுப்பூசி செலுத்தி, கொரோனா டெஸ்ட் செய்த பயணிகளின் மூலம் ஒமைக்ரான் எப்படி பரவுகிறது?

வீட்டுக்குள்ளேயும் தண்ணீர் உள்ள பாத்திரங்களை, உணவுப் பண்டங்களைத் திறந்துவைக்காதீர்கள். எப்போதும் ஃப்ரெஷ்ஷாக, சுத்தமாக சமைத்த உணவுகளையே சாப்பிடுங்கள்."

எல்லாவற்றையும் விட முக்கியமாக, லேசான காய்ச்சல், இருமல், சளித் தொந்தரவு என எந்த அறிகுறியையும் அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெறுங்கள். தேவையில்லாமல் வெளியே அலைவதைத் தவிருங்கள்.



source https://www.vikatan.com/health/healthy/can-a-person-get-infected-by-two-different-viruses-at-a-time

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக