Ad

வியாழன், 23 டிசம்பர், 2021

How to series: ஆன்லைனின் வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி? | How to file Income Tax online?

வருமான வரித்துறை புதிதாக உருவாக்கியுள்ள வெப்சைட்டில் எளிதாக வருமான வரி தாக்கல் செய்வது குறித்த வழிமுறைகள் மாற்றப்பட்டிருப்பதால் எளிதாக நம்மால் வருமான வரிக் கணக்குத் தாக்கல் (Income Tax Return Filing) செய்ய முடிகிறது. இதனால் மாதச் சம்பளம் பெறும் எந்தவொரு தனி நபரும் வருமான வரி தாக்கலுக்கு என்று தனியாக ஆடிட்டர் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. தங்களுடைய வீட்டிலேயே இருந்தபடி எளிதான முறையில் தாங்களே வரிக் கணக்கு தாக்கல் செய்து கொள்ளலாம் என்கிறார் தேனியைச் சேர்ந்த ஆடிட்டர் ஜெகதீஷ். கூடவே அதற்கான வழிமுறைகளையும் பகிர்ந்துகொள்கிறார்.

ஆடிட்டர் ஜெகதீஷ்

Also Read: How to: Online-ல் ஆதார் PVC கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? | How to apply for Aadhaar Card?

ஸ்டெப் 1
- ``மாத சம்பளக்காரர் www.incometaxindia.gov.in என்ற வெப்சைட்டை ஓப்பன் செய்துகொள்ள வேண்டும். இதற்கு முன்னதாக ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு எண்ணை இணைத்துக்கொள்ள வேண்டும். இணைந்திருந்தால் மட்டும்தான் வருமான வரி தாக்கல் செய்ய முடியும்.

ஸ்டெப் 2
- வருமான வரி வெப்சைட் உள்ளே சென்று உங்களை நீங்கள் ரெஜிஸ்டர் செய்துகொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் ரெஜிஸ்டர் என்று இருக்கும் இடத்தை அழுத்தி உள்ளே கேட்கப்படும் விவரங்களைக் கொடுத்திட வேண்டும். இதில் பெரும்பாலும் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களே கேட்கப்படும். ரெஜிஸ்டர் செய்த பின் உங்களுக்கான பயனர் பெயராக பான்கார்டு எண்ணாக இருக்கும். பாஸ்வேர்ட் நீங்கள் கொடுக்க வேண்டும். ஒருமுறை நீங்கள் ரெஜிஸ்டர் செய்துவிட்டால் பின் நீங்கள் இந்த வெப்சைட்டை அணுகும்போது உங்களுடைய பயனர் பெயரையும், பாஸ்வேர்டையும் கொடுத்து லாக் இன் செய்து கொள்ளலாம். லாக் இன் செய்துகொண்டால் உங்களுடைய மற்ற விவரங்களை அப்டேட் செய்துகொள்ளலாம். இந்த விவரங்கள் நேரிடையாக ITR ரிட்டர்னில் சேமிக்கப்பட்டுவிடும். இதனால் ஒவ்வொரு முறையும் உங்களுடைய விவரங்களைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஸ்டெப் 3

- வருமான வரி ரிட்டர்னில் மொத்தமாக ஏழு விதமான ஃபார்ம்கள் உள்ளன. இதில் சம்பளம் வாங்குபவர்களுக்கு என இரண்டே இரண்டு ஃபார்ம்கள் மட்டுமே உள்ளன.

ஃபார்ம் 1
- வருடம் ரூ.30 லட்சத்துக்குள் வருமானம் பெறும் தனி நபருக்கானது. ஆனால், அந்த தனிநபர் ஒரு நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தால் அவருக்கு இந்த ஃபார்ம் 1 தேவையில்லை.

ஆஃப்லைன், ஆன்லைன் என இரண்டு வகைகளில் ஐ.டிஆர் ஃபைல் செய்யலாம். ஆன்லைன் முறையில் பைல் செய்வது எளிது என்பதால் அந்த முறையிலேயே நாம் ஃபைல் செய்யலாம்.

Tax (Representational Image)

- ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் உங்களுடைய வங்கிக் கணக்கு ஏதாவதொரு முக்கியமான வங்கிக் கணக்கு இது மூன்றையும் நீங்கள் முன்னதாகவே ரெஜிஸ்டர் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், நீங்கள் ஏற்கெனவே கட்டிய வருமான வரி அட்வான்ஸ் அல்லது அதிகமாக டி.டி.எஸ் கட்டியிருந்தாலோ உங்களுக்கு ஃரீபண்ட் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, அதற்கேற்ற மாதிரியான வாங்கிக் கணக்கைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
- ஐடிஆர் பார்மைத் தனிப்பட்ட தகவல்கள், மொத்த வருமானம், வருமான வரி செலுத்தியது, வரி பாக்கி எனப் பிரித்திருப்பர்.

- தனிப்பட்ட தகவல் பிரிவில், முன்னதாக அனைத்து வருமான தகவல்களையும் நாம் நிரப்ப வேண்டியதாக இருக்கும். ஆனால், தற்போது அனைத்து (வரி, டி.டி.எஸ்) விவரங்களும் ஐ.டி.ஆர் ஃபார்மில் பதிவாகியிருக்கும். இதைச் சரியாக இருக்கிறதா என்பதைக் கவனித்துக்கொள்வதுதான் நம்முடைய வேலையாக இருக்கும். தனிப்பட்ட தகவல்களும் இங்கு தன்னிச்சையாக நிரப்பப்பட்டுவிடும். இத்தனையும் சரி பார்த்து, திருத்தம் ஏதேனும் இருப்பின் அவற்றை சரி செய்துகொள்ளலாம்.

- அடுத்ததாக gross total income பகுதியில், ஃபைல் செய்வதற்கு முன்னதாக உங்களுடைய சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட TDS தொகைக்காக உங்களுடைய நிறுவனத்தில் இருந்து பைல் செய்யப்படும் ஃபார்ம் 16யை, உங்கள் நிறுவனத்தில் இருந்து பெற்று வைத்துக்கொள்ளவும். ஏனெனில், இது பற்றிய விவரங்கள் தன்னிச்சையாக நிரப்பப்பட்டு இருப்பதால் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டியது இருந்தால் அவற்றைத் திருத்திக்கொள்ளலாம்.

வரி

Also Read: How to Series: திருமணச் சான்றிதழ் பெறுவது எப்படி?| How to get marriage certificate?

- டெபாசிட் மூலம் கிடைத்திருக்கும் வட்டி பற்றிய விவரங்களும் வங்கி மூலம் ஃபார்மில் நிரப்பப்பட்டிருக்கும். அதையும் நீங்கள் சரிபார்த்து திருத்திக்கொள்ளலாம்.
- நீங்கள் இவ்வாறு gross total income பகுதியில் உள்ள அனைத்தையும் சரிபார்த்த பின் 80C, 80CCC, 80CCD மற்றும் 80D போன்ற பிரிவுகளின் கீழ் கழித்துக்கொள்ளலாம். இந்த அனைத்துக் கழிவுகளுக்கும் பின் மொத்த வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் நீங்கள் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யலாம்.

- Tax paid பகுதியில், Pre tax paid இல் TDS on salary, TDS on bank interest capital gain போன்ற விவரங்கள் சேமிக்கப்பட்டிருக்கும். அதற்கடுத்ததாக நீங்கள் ஒருவேளை அட்வான்ஸ் வரி செலுத்தியிருந்தால் அதனுடைய விவரங்களும் அங்கு நிரப்பட்டிற்கும்.
- இவை அத்தனையும் நிரப்பப்பட்டபின் உங்களுக்கு நீங்கள் கட்டிய வருமான வரியில் இருந்து ரிட்டர்ன் வர வேண்டுமென்றால் அது வந்துவிடும் அல்லது நீங்கள் இன்னும் அதிகமாக வரி செலுத்த வேண்டும் என்றால் அதைச் செலுத்தலாம். அல்லது pay later என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து சில நாள்கள் கழித்துகூட நீங்கள் செலுத்தலாம். ஆனால், அப்படிச் செய்யும்போது வட்டியுடன் வசூலிப்பார்கள் என்பதால் ரிட்டர்ன் ஃபைல் பண்ணும்போதே வரி கட்டிவிடுவது நல்லது. இப்படி அனைத்து ஃபார்ம் ஒன்றின் அனைத்துப் பகுதியையும் நிரப்பிய பின் இதை ஆன்லைனில் ஃபைல் செய்ய வேண்டும்.

எப்படி ஃபைல் செய்வது?

www.incometax.gov.in என்ற வெப் சைட்டுக்குள் e-filling போர்ட்டலை ஓப்பன் செய்துகொள்ளலாம். அதன் உள்ளே சென்ற பின் ஒரு டேஷ்போர்டு இருக்கும். அதன்பின் e-file டேஷ்போர்ட் இருக்கும். அதில் ஒரு மெனு வரும் அதில் Individual என்பதை க்ளிக் செய்து உள்ளே செல்லவும், அங்கு அதில் மதிப்பீட்டு ஆண்டை சரி செய்து கொள்ளலாம். அதன்பின் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் எதில் பைல் செய்ய வேண்டும் என option இருக்கும். அதில் ஆன்லைன் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். எல்லாம் சரிபார்த்த பின் proceed கொடுக்க வேண்டும், கொடுத்தபின் எந்த ஃபார்ம் என்ற option இருக்கும் அதில் ஃபார்ம் ஒன்றை க்ளிக் செய்துகொள்ளவும். தொடர்ந்து குறிப்பிட்ட டாக்குமென்டுகளை அப்லோட் செய்து சப்மிட் செய்து கொள்ளலாம். இந்த முறையில் ஈஸியாக வீட்டிலேயே நாம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம்" என்கிறார்.

- வைஷ்ணவி



source https://www.vikatan.com/business/finance/how-to-file-income-tax-online

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக