Ad

செவ்வாய், 21 டிசம்பர், 2021

நான்கு ஆண்டுகள் கழித்து மீடியாவில் என்ட்ரியாகும் கல்யாணி? பின்னணி இதுதான்!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், கல்யாணி. தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் பிறகு சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். ஹிட் சீரியல்கள் பலவற்றில் நடித்துக் கொண்டிருந்தவர் திருமணத்திற்கு பிறகு குட்டி பிரேக் எடுத்துக் கொண்டார்.

கல்யாணி

ஃபேமிலியோடு செட்டில் ஆனவர் எப்போது மீடியாவில் என்ட்ரி கொடுப்பார் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் 'ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்' நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் சின்னத்திரைக்குள் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

குழந்தைகளுக்கான நடிப்புத் திறமையை வெளிக் கொண்டு வரும் நிகழ்ச்சி, 'ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்'. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டு பல குழந்தைகள் இன்றைக்கு சின்னத்திரை, வெள்ளித்திரை என நடிப்பில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நடிகை சினேகா, பிக்பாஸ் சம்யுக்தா மற்றும் மிர்ச்சி செந்தில் நடுவர்களாக இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை கீர்த்தி சாந்தணு தொகுத்து வழங்க இருக்கிறார்.

Also Read: பிக் பாஸ் சீக்ரெட்ஸ்: சீரியல் என்ட்ரி, கணவர் மரணம், சிம்புவின் சிபாரிசு - யார் இந்த பாவனி ரெட்டி?

கல்யாணி

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளின் மென்டார் ஆக நடிகை கல்யாணியும், காமெடி நடிகர் அமுதவாணனும் இருக்கிறார்கள். இதன் மூலம் பல ஆண்டுகள் கழித்து கல்யாணி ரீ-என்ட்ரியாகிறார். பலரும் அவருடைய கம்பேக்கை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள்!



source https://cinema.vikatan.com/television/actress-kalyanis-comeback-in-television-industry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக