Ad

வியாழன், 23 டிசம்பர், 2021

Tamil News Today: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் ஒமைக்ரான் பரவல் - முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

ஒமைக்ரான் பரவல் - முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமை செயலகத்தில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட முக்கிய அதிகரிகள் கலந்து கொள்ள உள்ளார்கள். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்துவது, கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. பண்டிகை காலம் வருகிறது என்பதால், அதில் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

தலைமைச் செயலகம்

இதனிடையே, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேற்று பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது, ஒமைக்ரான் காரணமாக கொரோனா பரவலின் வேகம் அதிகரித்தால், அதை எதிர்கொள்ள நாடு முழுக்கவும் அதற்கேற்ப சுகாதாரக் கட்டமைப்புகளை தயார்ப்படுத்துவது, மாநில அரசுகளுடன் மத்திய ஒருங்கிணைந்து பணியாற்றுவது ஆகியவை குறித்து அதிகாரிகளுக்கு பிரதமரின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு மாநிலங்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், பண்டிகை காலம் வருவதையொட்டி, மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த உள்ளூர் அளவில் ஊரடங்கு, கட்டுப்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுப்பதை பரிசீலிக்க வலியுறுத்தியிருக்கிறது. மேலும், சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களை தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-24-12-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக