Ad

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

விகடன் செய்தி எதிரொலி: இடித்துத் தள்ளப்பட்ட சிதிலமடைந்த பேருந்து நிறுத்தம்! - மக்கள் மகிழ்ச்சி

திருவாரூரிலிருந்து நாகபட்டினம் செல்லும் வழியில் கிடாரங்கொண்டான் பேருந்து நிறுத்தம் இருக்கிறது. திரு.வி.க அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தினமும் கல்லூரிக்கு செல்ல இந்த பேருந்து நிறுத்தத்தை தான் பயன்படுத்துவர்.

சிதலமடைந்த நிலையில் பேருந்து நிலையம்

இது ஆபத்தான நிலையில் இருப்பதையும், எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதையும் விவரித்து நாம் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தோம். நம் செய்தியின் மூலம் பேருந்து நிறுத்தத்தின் அவல நிலை அரசு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

Also Read: `அசம்பாவிதம் தவிர்க்க, இடித்துத் தள்ளுங்கள்'-சீரமைக்கப்படுமா திருவாரூர் நகராட்சி பேருந்து நிறுத்தம்?

அதன் எதிரொலியாக பேருந்து நிறுத்த நிழற்குடை நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளப்பட்டது. மேலும் புதிய பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கான பணிகளையும் அதிகாரிகள் தொடங்கியிருக்கின்றனர். பேருந்து நிறுத்தத்தின் நிலைமையை விகடன் சுட்டிக்காட்டிய உடனே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டதற்கு அந்தப் பகுதி மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இடித்துத் தள்ளப்பட்ட பேருந்து நிறுத்தம்

இது குறித்து நம்மிடம் பேசிய திரு.வி.க அரசு கலைக்கல்லூரி மாணவர் தாமோதிரன், ``நான் மூன்றாம் ஆண்டு விலங்கியல் துறையில் பிடிக்கிறேன். நான் முதலாமாண்டு சேர்ந்த போதிலிருந்தே இந்த பேருந்து நிறுத்தம் இப்படி தான் இருக்கிறது.

இடித்துத் தள்ளப்பட்ட பேருந்து நிறுத்தம்

இந்த பேருந்து நிறுத்தத்தை சீர்செய்யக் கோரி கல்லூரி அளவில் மாணவர்கள் திரண்டு போராட்டம் கூட நடத்தியிருக்கிறோம். ஆனாலும், எந்த பயனும் இல்லை. தற்போது, விகடன் செய்தியின் எதிரொலியாக அந்த பேருந்து நிறுத்தம் இடிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. விகடனுக்கு நன்றி" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/govt-officials-have-demolished-a-bus-stop-in-thiruvarur-following-vikatan-remarks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக