Ad

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

Tamil News Today: முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 14 இடங்களில் மீண்டும் சோதனையிடும் லஞ்ச ஒழிப்புத்துறை!

மீண்டும் தங்கமணி... மீண்டும் ரெய்டு!

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 69 இடங்களில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையிட்டனர். சென்னை, நாமக்கல், கரூர், சேலம், ஈரோடு, கர்நாடகா, ஆந்திர உள்ளிட்ட பகுதிகளில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், தற்போது இன்று காலை முதல் மீண்டும் தங்கமணி தொடர்புடைய 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தங்கமணி

ஏற்கனவே நடத்திய சோதனையில் கிடைத்த தகவலின் படி, இன்று மீண்டும் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த ரெய்டு ஆனது, நாமக்கல் மாவட்டத்தில் 10 இடங்களிலும், ஈரோடு நாவட்டத்தில் 3 இடங்களிலும் சேலம் மாவட்டத்தில் 1 இடத்தில் நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-20-12-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக