Ad

வியாழன், 16 டிசம்பர், 2021

Tamil News Today: முப்படைத் தளபதிகள் குழுவின் தலைவராக மனோஜ் முகுந்த் நரவானே நியமனம்!

விஜய் திவாஸ்: பொன்விழா கொண்டாட்டம்!

1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் போர் டிசம்பர் மாதம் 3-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி இந்தியா வெற்றிவாகை சூடியது. அதே தினத்தில் நிபந்தனையற்ற போர்நிறுத்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது.

போரில் பங்கேற்ற பாகிஸ்தான் வீரர்கள் 93,000 பேர் இந்தியாவிடம் சரணடைந்தனர். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், டிசம்பர் 16-ம் தேதியை `விஜய் திவாஸ்’ என்று இந்தியா கொண்டாடிவருகிறது.

விஜய் திவாஸ்

இந்த ஆண்டு இன்று போரில் வெற்றிபெற்று 50 ஆண்டுகள் ஆனதையொட்டி பொன்விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவுச்சின்னம், இன்று காலை 10 மணி முதல் 19-ம் தேதி மாலை 5 மணி வரை நான்கு நாள்களுக்கு பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்துவிடப்படும். சென்னை தீவுத் திடலில் போர் நினைவுச்சின்னத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம்வைத்து மரியாதை செலுத்தினார். இந்திய அளவில் இந்த நாளுக்கான வாழ்த்து செய்தியை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பகிர்ந்துவருகிறார்கள்.

முப்படைத் தளபதிகள் குழுவின் தலைவராக மனோஜ் முகுந்த் நரவானே நியமனம்!

மனோஜ் முகுந்த் நரவானே

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படைத் தளபதியான பிபின் ராவத், அவரின் மனைவி உட்பட அதில் பயணம் செய்த 14 பேரும் உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்தியாவின் அடுத்த முப்படைகளின் தலைமைத் தளபதி நியமிக்கப்படும் வரை, ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே முப்படைத் தளபதிகள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-16-12-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக