Ad

சனி, 4 டிசம்பர், 2021

``ஜூலியோட காதலன் நானில்லை" - வைரலாகும் போட்டோவிலிருக்கும் இளைஞன் விளக்கம்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர், மரிய ஜூலி. அதைத் தொடர்ந்து இவர் பிக்பாஸ் தமிழ் நிகழச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். இவர் நேற்று அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மனீஷ் என்பவர்மீது மோசடிப் புகாரளித்திருந்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். சமூக வலைதளங்களிலும், சில யூடியூப் சேனல்களிலும் ஜூலி ஒருவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அவர் தான் மனீஷ் என தகவல்கள் பரவின. இந்நிலையில், அந்த புகைப்படத்தில் இருக்கும் நபரின் பெயர் ரஜ்ஹித் இப்ரான் எனத் தெரிய வந்தது. அவரை தொடர்பு கொண்டு பேசினோம்.

ரஜ்ஹித் இப்ரான் -ஜூலி

"நான் மனீஷ் இல்லைங்க. ஆனா, இன்னைக்கு பலரும் நான் மனீஷ்னு நினைச்சு என் ஃபோட்டோவை பலரும் தவறாக பயன்படுத்திட்டு இருக்காங்க. நான் லவ்வெல்லாம் பண்ணலை. ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிச்சோம். அந்தப் பட புரொமோஷனுக்காக எடுத்த ஃபோட்டோதான் அதெல்லாம்!" என்றார்.

மேலும், இதுதொடர்பாக தெரிந்துகொள்ள ஜூலியைத் தொடர்பு கொண்டோம். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை



source https://cinema.vikatan.com/television/article-about-bigg-boss-season-1-contestant-julies-police-complaint

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக